பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇95



கண்ணன் அவனைத் தடுத்து நிறுத்தி, "நில் ஓடாதே; உன்னை ஒன்றும் செய்யமாட்டேன்” என்று அபயம் அளித்தான். சத்தியபாமை அவனை நோக்கி “நீ தேவர்களுக்குத் தலைவன்; சசிதேவி மதிக்கும் கணவன்; நீ தோற்று ஒடி எவ்வாறு அவள் முன் தலைகாட்ட முடியும்? பாரிஜாதம் இல்லாமல் திரும்பினால் அவள் உன்னை மதிக்கமாட்டாள். அதற்குப் பிறகு உனக்கு இந்திரப் பதவி எதற்கு? நான் இந்தப் பாரிஜாத மலருக்காக இந்தச் சண்டையை உண்டாக்கவில்லை; மானுடப்பெண் என்று என்னை அவமதித்த உன் மனைவிக்கு ஒரு பாடம் கற்பிக்கவே இந்தச் சண்டையை மூட்டினேன். உன்னைக் கொண்டு அவள் கர்வம் படைத்திருந்தாள்; எனக்கும் என் கணவனால் ஒருபெருமை உண்டு; அவன் எத்தகையவன் என்பதை உனக்கும் அவளுக்கும் காட்டவே இந்தப் பூசலைக் கிளப்பினேன். இந்தப் பாரிஜாதம் இல்லாமலே என் கண்வனின் மதிப்பை நான் பெற முடியும்; அவ்ளுக்கு இந்த மலர் இல்லாவிட்டால் பெருமைப்பட முடியாது. அதை வைத்துக்கொண்டு அவள்தான் அழகி என்று கர்வப்பட்டுக் கொண்டிருக்கிறாள்; அதை மற்றவர்களும் அடைய முடியும் என்று காட்டவே இதைத் தூண்டினேன். நீயே இந்த மரத்தை எடுத்துக்கொள்; எங்களுக்குத் தேவை இல்லை என்று திருப்பிக் கொடுத்தாள். இந்திரன் தன் செய்கைக்கு வருந்தினான். எனினும், கண்ணனிடம் தான் அடைந்த தோல்விக்கு அவன் வெட்கப்படவில்லை; அதை அவன் பெருமையாகவே