பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 ராசீ கொண்டான். கண்ணனின் பெருமையையும் ஆற்றலையும் உணரத் தேவர்களுக்கு ஒருவாய்ப்பு உண்டாயிற்று என்று அடக்கமாகப் பேசினான். கண்ணனும் அவனை அன்புடன் ஆதரித்து, "நீ இந்த அமரர் உலகத்துக்கு அதிபதி, நாங்கள் மனிதர்கள்; நாங்கள் செய்த சிறுபிழையை மன்னிக்க வேண்டும் என்று ஏளனமாகப் பேசிச் சிரித்துப் பின் அவனை மன்னித்து அவனுக்குரிய பதவியையும் தலைமையையும் மதித்து அவனை ஊக்கப்படுத்தினான். "நீ அமரர் தலைவன்; இந்த வச்சிராயுதப்படை எதிரிகளைச் சங்கரிக்க மிகவும் அவசியம்; நீயே வைத்துக் கொள்; உனக்கு உடைமை என்று கொடுத்துவிட்ட பொருளை நாங்கள் எடுத்துக் கொள்வது தவறுதான்; நீயே இந்தப் பாரிஜாத மரத்தை இங்கேயே வைத்துக்கொள்; எமக்குத் தேவைஇல்லை" என்று சொல்லித் திருப்பிக் கொடுத்தான். - இந்திரன் மிகவும் அடக்கமாகக் கண்ணனிடம் பேசினான்; மானுடன் அல்லன் நீ என்பது எனக்குத் தெரியும்; சர்வேசுவரனான நீ தீமையை அழிக்க மானுடனாக அவதரிக்கிறாய். யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கத் தக்கவர்களே, நான் தவறு இழைத்தவன்தான்: பலருக்குப் பயன்பட வேண்டிய பாரிஜாத மரத்தைத் தனி உடைமையாக்கியது தவறுதான்; என்னை மன்னித்தருளுக. இந்தப் பாரிஜாத மலரை உன் துணைவியர் விரும்பி இருக்கிறார்கள். அவர்கள் விருப்பத்தை நீ நிறைவேற்றித்