பக்கம்:கண்ணன் திருக்கதை.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கண்ணனின் திருக்கதை ◇97



தருவது உன் கடமை; இந்த மரத்தை துவாரகைக்கு எடுத்துப் போகலாம். இதோடு சுதர்மை என்ற தேவ சபையையும் உனக்காக அனுப்பி வைக்கிறேன். நீ பூமியை விட்டு நீங்கியபின் அவை அங்கிருக்கும் தகுதியை இழந்துவிடு கின்றன. அதற்குப் பிறகு அவை இங்கே வந்து சேர்ந்துவிடும், இதை இப்பொழுது எடுத்துச் செல்க" என்று வேண்டிக் கொண்டான். அதன்பின் அவனிடம் விடை பெற்றுக் கொண்டு கருடன்மீது அந்த மரத்தை வைத்துக்கொண்டு கண்ணன் சத்தியபாமையோடு வந்து சேர்ந்தான். அந்தப் பாரிஜாத மரம் சத்தியபாமையின் புழைக்கடையில் வைக்கப்பட்டு விட்டது. அது சத்தியபாமைக்குத் தனிப் பெருமையைத் தேடித்தந்தது. பதினாறாயிரத்து நூறு கன்னிகள் நரகாசூரனிடமிருந்துகொண்டு வந்த யானைகளை யும், குதிரைகளையும், மற்றுமுள்ள விலையுயர்ந்த பொருள் களையும் பலருக்கும் பகிர்ந்து அளித்தான். அவர்களோடு வந்த சேர்ந்த கன்னியர் பதினாறாயிரத்து நூறு பேருக்கும் தனித்தனி மாளிகை தந்தான். ஒவ்வொருவர் விரும்பியபடி அவர்களோடு உறைதற்குத் தனித்தனி உருவங்கள் எடுத்து அவர்களோடு தங்கி அவர்களை மகிழ்வித்தான். உஷையின் கனவு உஷை வாணாசுரனின் மகள் ஆவாள்; அவள் சிவனும் பார்வதியும் இணைந்திருக்கும் இழைவைக் கண்டு தானும் தக்க இளைஞனோடு இணையும் வாழ்வை