பக்கம்:கண் திறக்குமா.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

97



“இருக்கலாம்; தலைமுறை தலைமுறையாகவே அவன் குடும்பத்தில் யாரும் வேலை செய்வதில்லை. அதைப் பின்பற்றி அவனும் வேலை செய்யாமல் திரிந்துகொண்டிருக்கலாம் - ஏன், அவனுக்கென்னவாம்?”

‘அவனுக்கு ஒன்றுமில்லை; அவனால் உங்கள் தங்கை சித்ராதான் அவதிப்படவேண்டியிருக்கிறது!”

“என்ன அவதி?’ ‘அடிக்கடி அவன் அவளிடம் விளையாட வந்துவிடு கிறானாம் - அந்த விளையாட்டு அவளுக்கு விரசமாகப் படுகிறது; அவனுக்கோ சரசமாகப் படுகிறது!”

‘ஏன், மாமாவும் மாமியும் வீட்டில் இல்லையா?” ‘இருந்து என்ன பிரயோசனம்? - அவர்கள், ‘உன் மாமன்தானேடி, சும்மா விளையாடட்டுமே!’ என்கிறார்களாம்.’

‘அக்கிரமமாகவல்லவா இருக்கிறது!’

‘அந்த அக்கிரமம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறதாம். அதற்கேற்றாற்போல் அப்பாவும் அம்மாவும் அவன் கட்சியில் சேர்ந்துகொண்டு, ‘தொட்டில் எல்லாம் போய் விடுமோ? புருஷன் வாடையே படாமல் இருந்துவிடு வாயோ?” என்றெல்லாம் சொல்லி, மேலும் மேலும் அவள் பொறுமையைச் சோதித்துக் கொண்டே இருக் கிறார்களாம் - வேதனை தாங்காமல் அழுதால், நீலி! எத்தனைபேர் தலையை வாங்கிவிட்டு இல்லையென்பாயோ?” என்கிறார்களாம் - இந்த நரகத்திலிருந்து உன்னால் என்னை விடுதலை செய்ய முடியாதா?’ என்று அவள் இரண்டு நாட்களுக்கு முன்னால் எனக்குக் கடிதம் எழுதியிருந்தாள். நான் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்துக்கொண்டிருந்தேன் - நல்ல வேளையாக நீங்கள் வந்து விட்டீர்கள்!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/100&oldid=1379129" இலிருந்து மீள்விக்கப்பட்டது