பக்கம்:கண் திறக்குமா.pdf/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

101



திரும்பி வருவதற்குள் குழந்தை வீல், வில்’ என்று கத்த ஆரம்பித்துவிட்டது.

என்னிடமிருந்த சோடாவை வாங்கி அந்தப் பெண்ணின் வாயில் கொஞ்சங் கொஞ்சமாக ஊற்றினாள் முதியவள்.

சிறிது நேரத்திற்கெல்லாம் மூர்ச்சை தெளிந்து எழுந்த செங்கமலம், ‘அம்மா!’ என்று ஈனஸ்வரத்தில் இழுத்தாள்.

‘அம்மாவுமாச்சு, ஆட்டுக்குட்டியுமாச்சு! - இந்தா, இதை நீயே குடி!’ என்று ‘பாட்டி'லை அவளிடம் கொடுத்து விட்டுக் கீழே கிடந்த குழந்தையைத் தூக்கினாள் தாயார்.

‘இனிமேல் என்னால் ஒர் அடிகூட எடுத்து வைக்க, முடியாது, அம்மா!’ என்றாள் செங்கமலம்.

‘முடியாவிட்டால் இங்கேயே இரு!’ ‘ஏன் அம்மா, நீகூட என்னிடம் இரக்கங் காட்ட மாட்டாயா?’ என்று கேட்டுக்கொண்டே தலை நிமிர்ந்த செங்கமலம், என்னைக் கண்டதும் திடுக்கிட்டுத் தன் மேலாக்கை இழுத்துப் போர்த்திக்கொண்டாள்.

தாயார், குழந்தையை அவளிடம் கொடுத்துவிட்டு, “எமனே உன்னிடமும் உன் அழகான குழந்தையினிட மும் இரக்கங் காட்டியிருக்கும் போது நான் காட்டாமல் இருக்க முடியுமா?’ என்றாள்.

அவள் கண்களில் நீர் துளித்தது. நான் ஒன்றும் புரியாமல், ‘விஷயத்தைச் சொல்லுங்கள்?’ என்றேன்.

செங்கமலத்தின் தாயார் சிரித்தாள்; அவளோடு அவள் கண்ணிரும் சிரித்தது.

நான் திடுக்கிட்டு, ‘ஏன் சிரிக்கிறீர்கள்?’ என்றேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/104&oldid=1379106" இலிருந்து மீள்விக்கப்பட்டது