பக்கம்:கண் திறக்குமா.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

103



‘ஆமாம். அந்தச் செல்வக்குமாரனைத்தான் சொல்கிறேன்!”

அவ்வளவுவுதான்; சித்ராவை நான் நினைத்துக்கொண்டு விட்டேன் - “ஐயோ, அவளுடைய கதி?’ என்று நினைக்கும் போதே என் உடல் முழுவதும் ஒரு கணம் நடுங்கி ஒய்ந்தது. அதை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, ‘அப்படியானால் என்னை இதற்கு முந்தியே உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டேன்.

‘தெரியாமலென்ன, நன்றாய்த் தெரியும்!”

‘உங்களை எனக்குத் தெரியவில்லையே?’’

‘எப்படித் தெரியும்? - நான் வேலைக்காரிதானே, எதற்காக நீங்கள் என்னை ‘யார்?’ என்று கேட்டுத் தெரிந்துகொண்டிருக்கப்போகிறீர்கள்!’

‘நீங்கள் எங்கே வேலையாயிருந்தீர்கள்?’’

‘'வேறு எங்கேயாவது வேலையாயிருந்தால்தான் இந்தக் கதிக்கு நாங்கள் ஆளாகியிருக்க மாட்டோமே? உங்கள் மாமா வீட்டில் வேலையாயிருந்ததால் வந்த ஆபத்துத்தான் இது!”

எனக்கு விஷயம் ஒருவாறு புரிந்துவிட்டது. ‘எந்த வீட்டில் வேலையாயிருந்தாலும் முதலிலேயே கொஞ்சம் எச்சரிக்கையாயிருந்திருக்க வேண்டுமல்லவா?’ என்றேன்.

‘'நான் மட்டும் எச்சரிக்கையுடன் இருந்தால் போதுமா? இவளுமல்லவா எச்சரிக்கையுடன் இருந்திருக்க வேண்டும்? - இவள்தான் அதெல்லாம் ஒன்றும் வேண்டியதில்லை என்று சொல்லிவிட்டாளே? - ஏனென்றால், இவர்களுக்குள் காதல் எங்கிருந்தோ வந்து முளைத்துவிட்டதாம்; அந்தக் காதலுக்கு ஜாதி பேதம் கிடையாதாம்; ஏழை பணக்காரன் என்ற வித்தியாசம் கிடையாதாம்; அது எல்லாவற்றையும் கடந்ததாம்;

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/106&oldid=1379096" இலிருந்து மீள்விக்கப்பட்டது