பக்கம்:கண் திறக்குமா.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104

கண் திறக்குமா?


எப்பொழுதும் அழியாததாம் - இப்படியெல்லாம் அவன் சொன்னானாம். அப்பேர்ப்பட்ட காதல் இந்த அருமை மகன் தோன்றினானோ இல்லையோ, உடனே அழிந்து விட்டது?’ என்றாள் அவள்.

இந்தச் சமயத்தில், ‘என்ன இருந்தாலும் அவர் என்னவோ நல்லவர்தான், அம்மா!’ என்றாள் செங்கமலம்,

‘யார் இல்லை என்கிறார்கள்? - நல்லவர்களாயிருந்ததால் தான் நாம் இருந்த குடிசையைக்கூடப் பிய்த்து எறிந்து விட்டார்கள்!’

‘அவரா வந்து பிய்த்து எறிந்தார்?’

‘அவன் வந்து பிய்த்து எறியவில்லை. அவன் வீட்டு ஆட்கள் வந்து பிய்த்து எறிந்துவிட்டார்கள்!’

‘அப்பா இருக்கும் வரை அவருடைய வீடு என்று எப்படி அம்மா சொல்ல முடியும்?”

‘அதற்கு முதலிலேயே அவன் அப்பாவைக் கேட்டுக்கொண்டு வந்து உன்னைக் காதலித்திருக்க வேண்டும். இல்லையென்றால் அப்பாவைக் கேட்காமல் காதலிப்பதற்கு இருந்த தைரியம் உன்னைக் கல்யாணம் செய்து கொள்வதற்கும் இருந்திருக்க வேண்டும். அவனுக்கென்ன, இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் காதலிக்கலாம்; இன்னும் எத்தனை பேரை வேண்டுமானாலும் கைவிடலாம். உன்னால் முடியுமா?”

‘ஏன் முடியாது? - எல்லாம் முடியும்!’ என்றேன் நான்.

‘எப்படி முடியும்? - உலகம் சிரிக்காதா?’ என்றாள் அவள்.

‘உலகம் எல்லோரையும் பார்த்தா சிரிக்கிறது? செங்கமலத்தைப் போன்றவர்களை மட்டும் பார்த்துத்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/107&oldid=1379089" இலிருந்து மீள்விக்கப்பட்டது