பக்கம்:கண் திறக்குமா.pdf/109

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1O6


‘இவ்வளவு தூரம் பேசுகிறீர்களே, நான் உங்களை ஒன்று கேட்கட்டுமா?’

‘கேளுங்கள்!’

‘இந்தச் செங்கமலத்தை உங்கள் தங்கையாகப் பாவித்துக் கொள்ளுங்கள் - சிவகுமாரனால் வஞ்சிக்கப் பட்ட இவளை நீங்கள் என்ன செய்வீர்கள்? உங்கள் உறவினர்கள் என்ன செய்வார்கள்? - தங்களிடமிருந்து தள்ளி வைத்துவிடுவார்கள். அதேமாதிரி நீங்கள் சிவகுமாரனைத் தள்ளி வைத்துவிடுவீர்களா?”

‘கட்டாயம் தள்ளி வைத்துவிடுவேன்!” ‘அப்படியானால் என்னுடன் வாருங்கள் - இந்தக் குழந்தையை மட்டுமாவது நான் அவனிடம் ஒப்புவித்து விட்டுத் தான் வரப் போகிறேன் - இதனால் என்ன ஆனாலும் சரி!’ என்று அவள் கிளம்பினாள்.

அப்போது தற்செயலாக அந்த வழியே கூண்டு வண்டி ஒன்று வந்துகொண்டிருந்தது. நான் வண்டிக்காரனைக் கை தட்டி அழைத்து, ‘செய்யாமங்கலத்துக்கு வருகிறாயா?” என்றேன்.

‘வரேனுங்க!’ என்றான் அவன். எல்லோரும் வண்டியில் ஏறிக்கொண்டோம். சிறிது தூரம் சென்றதும் வண்டிக்காரன் என்னை நோக்கி, ‘இது உங்களுக்குத் தலைச்சன் பிள்ளைங்களா?’ என்றான்.

நான் தயங்கவில்லை; “ஆமாம்’ என்று சொல்லி வைத்தேன்.

‘திருச்சி ஆஸ்பத்திரியிலேயிருந்து வராப்போல இருக்குது!’ என்று தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்ட வண்ணம், ஹை, ஹை!’ என்று அவன் மாட்டை விரட்டினான்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/109&oldid=1379444" இலிருந்து மீள்விக்கப்பட்டது