பக்கம்:கண் திறக்குமா.pdf/110

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

107



10. செங்கமலத்தின் யோசனை!

மேடும் பள்ளமும் நிறைந்த பாதையிலே வண்டி போராடிய வண்ணம் சென்று கொண்டிருந்தது. செங்கமலம் திடீரென்று ஏதோ நினைத்துக் கொண்டவள் போல், ‘அம்மா, இந்தக் கோலத்துடன் நாம் அங்கேபோக வேண்டாம், அம்மா!’ என்றாள்.

‘ஏண்டி?’ என்று எரிந்து விழுந்தாள் தாயார். ‘என்ன இருந்தாலும் அவர்கள் கெளரவமான குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்; நாம் இந்தக் கோலத்துடன் அங்கே போய் அவர்களுடைய கெளரவத்தை ஏன் குலைக்க வேண்டும்?’

‘அடடடா, அவர்கள் மட்டும் நம்முடைய கெளரவத்தைக் குலைக்கலாமா?”

‘அவர்கள்தான் மோசமாக நடந்து கொண்டார்களென்றால் நாமுமா மோசமாக நடந்துகொள்ள வேண்டும்? என்னவோ, நடந்தது நடந்துவிட்டது; அதை ஏதாவது ஒரு நல்ல வழியில் திருத்திக்கொள்ளப் பார்ப்போமே?”

‘அது என்னடி, நல்ல வழி?” ‘எல்லோருமாகச் சேர்ந்து அங்கே போகவேண்டாம், அம்மா! - நானும் நீயும் இந்தக் குழந்தையுடன் எங்கே யாவது இற்ங்கிவிடுவோம். முதலில் இவர் மட்டும் அங்கு போய் நம்முடைய நிலைமையை எடுத்துச் சொல்லட்டும். பிறகு என்ன ஆகிறதென்று பார்த்துக்கொண்டு, மேலே செய்ய வேண்டியதைச் செய்யலாம்’ என்றாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/110&oldid=1379442" இலிருந்து மீள்விக்கப்பட்டது