பக்கம்:கண் திறக்குமா.pdf/113

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

கண் திறக்குமா?


‘என்ன, செங்கமலமா! - அவள் யார் என்று கூட எங்களுக்குத் தெரியாதே? உனக்கென்ன பைத்தியமா பிடித்திருக்கிறது?”

‘ஏன் முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கப் பார்க்கிறீர்கள்? - குடிசையைப் பிய்த்து எறிந்துவிட்டால் குற்றத்தை மறைத்துவிட முடியாது!”

‘யாருடைய குடிசையைப் பிய்த்து எறிந்தேன்? என்னுடைய குடிசையை நானே பிய்த்து எறிந்து விட்டேன்! - அவ்வளவுதானே? - அந்தக் கழுதை என் வீட்டில் வேலை பார்க்கும் வரை அதற்கு என்னுடைய குடிசையில் இடங் கொடுத்து வைத்திருந்தேன்; வேலையை விட்டு நீக்கிய பிறகு நான் அதற்கு இடங் கொடுப்பானேன்?’

‘பணம் இருந்தால் எது வேண்டுமானாலும் செய்து விடலாம் என்று நினைத்துவிடாதீர்கள்; பழி, யாரையும் விடாது - அந்தப் பழிக்குப் பகவான் தண்டனை அளிக்கும் வரை மக்கள் காத்துக் கொண்டிருக்கும் காலமும் அல்ல, இது!”

‘'என்னப்பா, என்னவெல்லாமோ பேசுகிறாய்! - எனக்கு ஒன்றுமே புரியவில்லையே?”

‘கொஞ்சம் நியாய புத்தியோடு யோசித்துப் பார்த்தால் உங்களுக்கு எல்லாம் புரியும் - ஓர் ஏழைப் பெண்ணுக்கு என்னவெல்லாமோ ஆசை காட்டி, அவளைத் தன் இஷடத்துக்குப் பயன்படுத்திக் கொண்டபின் கை விடுவதை யாரும் சகிக்க மாட்டார்கள் - உடனே அந்தப் பெண்ணைச் சிவகுமாரனுக்குக் கல்யாணம் செய்து வைக்க ஏற்பாடு செய்யுங்கள்!’

‘நல்ல வேடிக்கைதான், இது! - இன்று உங்களுடைய மகன்தான் என்னைக் கெடுத்தான் என்று இவள் வருகிறாள்; நாளைக்கு இன்னொருத்தி வருகிறாள்; அதற்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/113&oldid=1379036" இலிருந்து மீள்விக்கப்பட்டது