பக்கம்:கண் திறக்குமா.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

118

கண் திறக்குமா?


‘இவளுடைய புருஷன் எங்கே இருக்கிறான்? என்ன வேலை செய்கிறான்? என்ன சம்பாதிக்கிறான்? எப்போது வருவான்? நீங்கள் எப்படிச் சாப்பிடுகிறீர்கள்?’ என்றெல்லாம் குறுக்கு விசாரணை செய்து தொலைப்பார்கள். நமக்கு வரும் ஆத்திரத்தில், ‘அவன் எங்கேயோ போய்த் தொலைந்தான்!” என்றால், ‘இவள் ஏதோ முறை தவறி நடந்திருக்கிறாள்; அதனால்தான் இவளை அவன் தள்ளி வைத்துவிட்டிருக்கிறான்?’ என்று தங்களுக்குள் எல்லாம் தெரிந்தவர்களைப்போலக் குசுகுசு'வெனப் பேசிக் கொள்வார்கள் - இதெல்லாம் காதில் விழும்போது நம் மனம் என்ன பாடு படும்? அதற்குத்தான் நான் நினைத்தேன்...’

‘'என்ன நினைத்தீர்கள்?’

‘நம்மை மோசம் செய்த உலகத்தை நாமும் மோசஞ் செய்தால் என்ன என்று நினைத்தேன்!”

அதற்குள் செங்கமலம் குறுக்கிட்டு, ‘தயவு செய்து என்னை மட்டும் அதில் சேர்த்துக் கொள்ளாதே, அம்மா!’ என்றாள்.

‘போடி, போ! இப்படிச் சொல்ல உனக்கு வெட்கமாயில்லை? இப்போது கற்பைக் கட்டிக் காக்கப் பார்க்கும் நீ, அப்போது கட்டிக் காத்திருந்தால் என்ன?’ என்று அவளை அதட்டினாள் தாயார்.

‘என்ன விஷயம்? ஏன் இப்படி ஒருவர் மேல் ஒருவர் எரிந்து விழுகிறீர்கள்?’ என்றேன் நான்.

‘'சரி அவளை விட்டுவிடுவோம். என்னை மோசஞ் செய்த உலகத்தை நானும் மோசம் செய்யப் பார்த்தேன் என்று வைத்துக்கொள்ளுங்களேன் - நடுவில் நீங்கள் தான் குறுக்கிட்டு...’

‘என்ன. நானா குறுக்கிட்டேன்?'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/121&oldid=1379035" இலிருந்து மீள்விக்கப்பட்டது