பக்கம்:கண் திறக்குமா.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

124

கண் திறக்குமா?

மாட்டான் - அதெல்லாம் அந்தக் காலம்; இந்தக் காலத்தில் அப்படியெல்லாம் இருக்க முடியுமா?’ என்றாள்.

‘ஏன் முடியாது, சித்தி? நிச்சயம் முடியும்?” என்றான் பாலு.

‘எப்படி முடியும்? ‘புனிதம் மிக்க உங்கள் மனுதர்மம்’ அதற்கு இடங் கொடுக்காதே!” என்றேன் நான் சிரித்துக் கொண்டே.

மனு தர்மமாவது, மண்ணாங்கட்டியாவது? என்னைப்பற்றி நீ தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறாய்; மனித தர்மத்தைத் தவிர வேறொரு தர்மத்தையும் நான் ஒப்புக் கொள்வதில்லை!’ என்றான் பாலு ஆவேசத்துடன்.

‘'நான் தவறாக நினைத்துக் கொண்டிருக்கவில்லை; சட்டம் தவறாக நினைத்துக் கொண்டிருக்கிறது- இந்த அழகான உலகத்தில் எந்தக் காலத்திலாவது மனுதர்ம ராஜன் என்று ஒரு புண்ணியவான் இருந்தானோ இல்லையோ, அவன் பேரால் ‘இந்து லா’ என்றொரு சட்டம் மட்டும் இன்றுவரை இருப்பது உண்மை. அந்தச் சனியன் பிடித்த சட்டம் இல்லாமலிருந்தால் உன் சித்திக்கு இந்தக் கதி வந்திருக்குமா?’ என்றேன் நான்.

“என்ன கதி? என் சித்தி ஏன் இப்படி இருக்கிறார்கள்? எனக்கு ஒன்றும் விளங்கவில்லையே? கொஞ்சம் விவரமாய்ச் சொன்னால் தேவலை!”

‘சொல்கிறேன்; சொல்லாமலா போகப் போகிறேன்? - ஆனால் அதற்கு இது சமயமில்லை; நீ எங்கேயாவது அவசரமாகப் போகிறாயா?”

‘கொஞ்சம் அவசரந்தான்; அம்மாவுக்கு உடம்பு சரியில்லையென்று நேற்றுத் தந்தி வந்தது - அதற்காகப் போகிறேன்!”

‘'சரி, திரும்பி வந்ததும் அதைப் பற்றிப் பேசிக் கொள்ளலாம் - போய் வரட்டுமா?’ என்று நான் திரும்பினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/127&oldid=1379072" இலிருந்து மீள்விக்கப்பட்டது