பக்கம்:கண் திறக்குமா.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

கண் திறக்குமா?


‘அப்படியானால் ஊரிலிருந்து திரும்பியதும் நான் அவசியம் வந்து பார்க்கிறேன்!” என்றான் அவன்.

அவனுடைய தலை மறைந்ததும் செங்கமலம் எங்கிருந்தோ ஓடோடியும் வந்து எங்களுடன் கலந்து கொண்டாள்.

நாங்கள் நால்வரும் பாரிஸ்டர் பரந்தாமன் வீட்டை அடைந்தபோது அங்கே யாரையும் காணவில்லை. வீட்டு வாசலில் நின்று '‘ஸார், ஸார்!’ என்று இரண்டு மூன்று முறை குரல் கொடுத்துப் பார்த்தேன்; பதில் இல்லை.

சிறிது நேரங்கழித்து மிஸஸ் பரந்தாமன் வந்து கதவிடுக்கில் நின்று, ‘அவர் இல்லையே!’ என்றாள்.

“எங்கே போயிருக்கிறார்?’ என்று கேட்கலாமென்று நிமிர்ந்தேன்; அதற்குள் அவள் உள்ளே போய் விட்டாள்!

மேலே என்ன செய்வதென்று தெரியாமல் விழித்துக் கொண்டிருந்தபோது சற்றுத் தூரத்தில் சாந்தினி வருவது தெரிந்தது. உடனே நான் ஒடோடியும் சென்று, ‘'சித்ரா எங்கே, சாந்தினி?” என்று பரபரப்புடன் கேட்டேன்.

‘'ஸ், கல்யாணமாவதற்கு முன்னால் நாலு பேருக்குத் தெரிந்து நீங்கள் என்னுடன் பேசக் கூடாது; இது இந்து தர்மம், தெரியுமா?’' என்று வாயைப் பொத்திக் காட்டி விட்டு, “நேரே உங்கள் வீட்டுக்குப் போங்கள்; எல்லாம் தெரியும்!'’ என்று சொல்லிவிட்டு, அவள் முன்னும் பின்னும் பார்த்துக் கொண்டே நடந்தாள்.

எங்கள் வீட்டிலா?... இவ்வளவு சீக்கிரம் வீடுமாற்ற அங்கே இருந்தவர்களால் எப்படி முடிந்தது? - எனக்கு ஒன்றும் புரியவில்லை. இருந்தாலும் பின்னால் எல்லாவற்றையும் விசாரித்துத் தெரிந்துகொள்ளலாம் என்ற தீர்மானத்துடன் ‘விடுவிடு'வென்று நடந்தேன். என்னைப் பின்பற்றி நடப்பதற்குச் செங்கமலமும் அவளுடைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/129&oldid=1379087" இலிருந்து மீள்விக்கப்பட்டது