பக்கம்:கண் திறக்குமா.pdf/132

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

129

 பரந்தாமன் காரிலிருந்து இறங்கி உள்ளே வந்து கொண்டிருந்தார்.

அப்பொழுதுதான் செங்கமலத்தைப் பற்றிய நினைவு எனக்கு வந்தது. திரும்பிப் பார்த்தேன்; அவர்கள் ஒன்றும் தோன்றாமல் விழித்தது விழித்தபடி எனக்குப் பின்னால் நின்றுகொண்டிருந்தார்கள்.

“மன்னிக்க வேண்டும்; சித்ராவைப் பார்க்க வேண்டுமென்ற அவசரத்தில் உங்களை நான் மறந்தே விட்டேன் - வாருங்கள்!’' என்று அவர்களை அழைத்துக்கொண்டு போய் மாடியில் விட்டுவிட்டு, பரந்தாமனை வரவேற்க நான் தயாரானேன்.


13. விரும்பிய விதமே!

"இப்பொழுதுதான் ஊரிலிருந்து வந்தாற் போலிருக்கிறது!’ என்று சொல்லிக்கொண்டே உள்ளே நுழைந்தார் பாரிஸ்டர் பரந்தாமன்.

‘'ஆமாம், ஸ்டேஷனிலிருந்து நேரே உங்களுடைய வீட்டுக்குத்தான் வந்திருந்தேன்; வெளியே போயிருப்பதாகச் சொன்னார்கள்’' என்றேன் நான்.

‘'ஒஹோ! இன்று நம் குருகுலத்தைக் கொஞ்சம் நேரில் சென்று கவனிக்க வேண்டியிருந்தது; அதற்குத்தான் போயிருந்தேன்.”

‘'அப்படி என்ன விசேஷம், அங்கே?’'

'‘அதைப் பற்றிக் கேள்விப்பட்ட பெரிய மனிதர் ஒருவர் பார்வையிட வந்திருக்கிறார்; அவரிடமிருந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/132&oldid=1379455" இலிருந்து மீள்விக்கப்பட்டது