பக்கம்:கண் திறக்குமா.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

கண் திறக்குமா?


தர்மத்தின் பேரால் ஐயாயிரம், பத்தாயிரமாவது பிடுங்க வேண்டாமா?’

‘'அதற்கு?”

‘'இன்றாவது நம் குருகுலத்தில் வேலை செய்யும் பயல்கள்...’'

‘'குருகுலத்திலாவது, வேலை செய்யும் பயல்களாவது!’'

“சரி, படித்துக் கிழிக்கும் பயல்கள் என்றே வைத்துக் கொள். ‘தொழிற்கல்வி’ என்றால் என்ன ஐயா, அர்த்தம்? ஆதரவற்ற அனாதைச் சிறுவர்களிடம் சம்பளமில்லாமல் வேலை வாங்கிக்கொள்வது என்றுதானே அர்த்தம்?”

‘'இல்லை, அது உங்களுக்கென்று நீங்கள் தனியாகக் கற்பித்துக் கொண்டிருக்கும் அர்த்தம்!”

‘'ம், உனக்குத் தெரிந்தது அவ்வளவுதான். வயிற்றுக்குச் சோறில்லாமல் யாராவது தொழிற் கல்வி கற்றுக் கொள்ள முடியுமா? என் வீட்டுச் சோற்றைப் போட்டு ஊரார் வீட்டுக் குழந்தைகளுக்குத் தொழிற் கல்வி கற்றுக் கொடுக்க எனக்கென்ன பைத்தியமா?”

'‘என்ன இருந்தாலும் “மனச் சாட்சி’ என்று ஒன்று இருக்கிறது, பாருங்கள்!’

‘'அட, நீ ஒண்ணு! மனச் சாட்சியாவது, மண்ணாங் கட்டியாவது? சந்தர்ப்பத்துக்கு ஏற்றாற்போல் அது சாட்சி சொல்லும் என்பது உனக்குத் தெரியாது போலிருக்கிறது! சொல்வதைக் கேள்; இன்றாவது அந்தப் பயல்கள் பெரிய மனிதரின் பேரைச் சொல்லிக் கொஞ்சம் நல்ல சாப்பாடாகச் சாப்பிடட்டுமே என்று சமையற்காரனைக் கூப்பிட்டு அவனிடம் ஐம்பது ரூபாயைக் கொடுக்க மனமில்லாமல் கொடுத்துவிட்டு வந்தேன்...’'

‘'மற்ற நாட்களில்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/133&oldid=1379115" இலிருந்து மீள்விக்கப்பட்டது