பக்கம்:கண் திறக்குமா.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

131


‘'குருகுலத்துத் தோட்டத்தில் விளையும் கீரையோடு சரி ‘’

‘'இன்று?”

‘'முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், காரெட் டொமேட்டோ, பொட்டேட்டோ எல்லாம் இருக்கும்; நெய்யும் தயிரும் தண்ணீர் படுகிற பாடு படும். சாயந்திரம் வேறு பாதாம் ஹல்வா, பாஸந்தி, பஜ்ஜி, சொஜ்ஜி, டிக்ரி காப்பி எல்லாம் தயார் செய்யச் சொல்லியிருக்கிறேன் - பயல்களின் பாடு இன்று யோகந்தான்; தினந்தோறும் இப்படி யாராவது பெரிய மனிதர்கள் வரமாட்டார்களா என்று தவங்கிடப்பார்கள்! - அவர்களுக்கு மட்டுமென்ன எனக்குந்தான் இன்று யோகம். இன்றெல்லாம் செலவழிந்தால் என் கைப்பணம் நூறு ரூபாய்க்கு மேல் செலவழியாது; அதையும் பின்னால் குருகுலத்தின் செலவுக் கணக்கில் எழுதிவிடுவேன்; சாயந்திரம் அதற்குப்பதிலாக ஐயாயிரமோ, பத்தாயிரமோ அந்தப் பெரிய மனிதரிடமிருந்து வாங்கி என் சொந்தப் பைக்குள் போட்டுக் கொண்டு விடுவேன்!’

“அதை வரவுக் கணக்கில் எழுத மாட்டீர்களா?” “எழுதாமலென்ன, பேஷாய் எழுதுவேன். அதற்கேற்றாற்போல் செலவைக் காட்டுவதுதானா பிரமாதம்?’'

‘'அதற்குத்தான் என்னைப் போன்ற சிலர் இம்மாதிரிக் காரியங்களையெல்லாம் சர்க்காரே மேற்கொண்டு நடத்த வேண்டுமென்று சொல்கிறார்கள்.’'

‘'ஐயையோ! இவையெல்லாம் தர்ம காரியங்களாயிற்றே; உடல், பொருள், ஆவி மூன்றையும் தேசத்துக்குத் தத்தம் செய்துவிட்டு அரூபிகளாக நடமாடும் உத்தமோத்தமர்களின் சத் காரியங்களாயிற்றே! இவற்றைச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/134&oldid=1379122" இலிருந்து மீள்விக்கப்பட்டது