பக்கம்:கண் திறக்குமா.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

135


தருகிறேன். என்ன இருந்தாலும் பணக்காரரை வெறுத்துக் கொண்டு உன்னால் பத்திரிகை நடத்த முடியாது. ஆனானப்பட்ட காந்தியே அவர்கள் அடியோடு ஒழிய வேண்டுமென்று சொல்லவில்லை; கோயில் தர்மகர்த்தாக்களைப்போல அந்தப் பெருச்சாளிகள் ஏழைகளுக்கும் தர்மகர்த்தாக்களாக இருக்க வேண்டும் என்றுதான் சொல்கிறார். அத்தகைய பெருச்சாளிகளில் ஒன்றாக நீயும் ஏன் இருக்கக்கூடாது? அவரே அப்படிச் சொல்லும்போது நீ மட்டும் அதற்கு மாறாக ஏன் நடக்க வேண்டும்?’

‘'சரி, அப்படியானால் எனக்கு உங்களால் எவ்வளவு பணம் தரமுடியும்?’'

‘'எவ்வளவு வேண்டுமானாலும் கொடுத்துக் கொண்டே இருக்கிறேன்!'’

'‘இது என்ன வேடிக்கையாயிருக்கிறதே! உங்களுக்கு ஏது அவ்வளவு பணம்?'’

தேசபந்து நிதிக்குப் பத்து லட்ச ரூபாய் சேர்ப்பதென்று முடிவு செய்திருக்கிறார்களே, அது உனக்குத் தெரியாதா?”

‘'தெரியாமலென்ன, அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்?’

‘'சம்பந்தமில்லாவிட்டால் என்ன, நாம் சம்பந்தப்படுத்திக் கொள்ள வேண்டியது தான்!”

‘'இது அக்கிரமமில்லையா?”

“எது அக்கிரமமில்லை? சொல்வதைக் கேள், தம்பி! நானோ இதுவரை தேசபந்து நிதிக்காக ரூபாய் ஐம்பதினாயிரம் வரை சேர்த்திருக்கிறேன், எல்லாம் எனக்காகக் கொடுத்தது தான்; ஸி.ஆர்.தாஸாக்காக யாரும் கொடுத்து விடவில்லை. அப்படிக் கொடுத்தவர்களில் சிலர் தங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/138&oldid=1379153" இலிருந்து மீள்விக்கப்பட்டது