பக்கம்:கண் திறக்குமா.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

143

 ‘'சாந்தினி சொன்னால் நான் ஏன் கேட்க வேண்டுமாம்?” என்றேன்.

‘'என்ன மாப்பிள்ளை ஸார், எனக்கு ஒன்றுமே தெரியாது என்று நினைத்துக்கொண்டீரா? எல்லாம் தெரியும் ஸார், தெரியும். வேண்டுமானால் நீரே இந்த ‘டயரி"களைப் பாரும்!” என்று அவர் இரண்டு டயரிகளை எடுத்து என்னிடம் கொடுத்தார்.

வியப்பும் திகைப்பும் ஒருங்கே அடைந்தவனாய் அவற்றை நான் பிரித்துப் பார்த்தேன். பின் வரும் வரிகள் என் கண்களில் பட்டுத் தெறித்தன:

.... காந்திஜியின் விடுதலையைக் கோரி எழுந்த கிளர்ச்சியில் அவர் பங்கெடுத்துக் கொண்டதை நினைக்க நினைக்க எனக்கு எவ்வளவோ பெருமையாயிருக்கிறது; அவரைப் பற்றிப் பிறர் பேசுவதைக் கேட்கக் கேட்க என்னை என்னவோ செய்கிறது. அதற்கு முன் அப்பா வுடன் அவர் போட்ட சண்டையைத்தான் என்னால் எப்படி மறக்க முடியும்?....

- - - - - இன்று ஆஸ்பத்திரிக்குச் சென்றிருந்தேன், அப்பாவுக்குத் தெரியாமல்தான். என்ன துணிச்சல் எனக்கு, இப்பொழுதுதான் அவரை நான் முதன்முறையாகப் பார்க்கிறேனாக்கும்?

நான் அவரைப் பார்த்தேன்; அவர் என்னைப் பார்த்தார். முதலில் நானா பேசுவேன்? அதுதான் இல்லை; அவரே பேசினார். அதிகமாக ஒன்றும் பேசவில்லை; ‘சாந்தினி, நீயா!’ என்று எண்ணி ஒரே ஒரு வார்த்தைதான் பேசினார். நான் மட்டும் அதிகமாகப் பேசிவிடுவேனா? ஊஹாம்; என்னை மறவாதீர்!’ என்று பதிலுக்கு நானும் எண்ணி ஒரே ஒரு வார்த்தை பேசிவிட்டு எடுத்தேன் ஒட்டம்’...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/146&oldid=1379186" இலிருந்து மீள்விக்கப்பட்டது