பக்கம்:கண் திறக்குமா.pdf/147

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

144

கண் திறக்குமா?


... பாவம், தாயாரின் தகனக் கிரியையின் போதுகூட அருகிலிருக்கும் பாக்கியம் அவருக்குக் கிட்டவில்லை; பாழும் சர்க்கார்தான் அவரை பரோலில் விடக்கூட மறுத்து விட்டார்களாமே!....

... இந்தச் சித்ராவுக்கு அவர்மேல் ஏன்தான் இவ்வளவு ஆத்திரமோ தெரியவில்லை. ம், என்ன இருந்தாலும் பெண்; அவளுக்காக நாம் இரங்கத்தான் வேண்டும்.

சிநேகம் செய்து கொள்வதாயிருந்தாலும் சரி, சண்டை பிடித்துக் கொள்வதாயிருந்தாலும் சரி - பெண்களைத்தான் யாரும் மிஞ்ச முடியாதே!... -

  • - - - - அப்பாடா! மூன்று வருடங்களுக்குப் பின் அவர் இன்றுதான் எங்கள் வீட்டைத் தேடி வந்திருக்கிறார். மனங்கனிந்து அவரை வரவேற்கச் சமூகம் என்னை அனுமதிக்க மாட்டேன் என்கிறது. என்ன செய்வேன், கழுத்தில் தாலி ஏறினால்தான் அந்த அனுமதி எனக்குக் கிடைக்கும் போலும்?...

.... அடாடா, கல்யாணமாவதற்கு முன்னால் இந்த ஆண்கள் எவ்வளவு நல்லவர்களாயிருக்கிறார்கள்! சொன்னது சொன்னபடி வந்துவிட்டாரே?

இருவரும் கடற்கரைக்குச் சென்றோம். அதுவரை என்ன வெல்லாமோ பேசவேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த நான், அவரைக் கண்டதும் என்ன பேசுவதென்றே தெரியாமல் விழித்தேன். அதனாலென்ன, எங்கள் கண்கள்தான் பேச வேண்டியவற்றை யெல்லாம் பேசி விட்டனவே!

அடுத்தாற்போல் அங்கிருந்த ஒரு படகின் மறைவில் சற்றே விலகி உட்கார்ந்தேன் நான்; சற்றேநெருங்கி உட்கார்ந்தார் அவர். நான் விலக அவர் நெருங்க, அவர் நெருங்க, நான் விலக, நான் விலக அவர் நெருங்க, அவர்நெருங்க நான்விலக, இருவரும் கடைசியாக வாய் விட்டுச்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/147&oldid=1379182" இலிருந்து மீள்விக்கப்பட்டது