பக்கம்:கண் திறக்குமா.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

கண் திறக்குமா?

எனக்குக் கடைசிவரை இருக்கவில்லை; வழியிலேயே அது மறைந்துவிட்டது. அதற்கேற்றாற்போல் 'பெண்களுக்கு உதவி செய்வதற்கென்றே பிறந்திருக்கும் சில பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகள்' என்னுடன் பேச முயன்றார்கள்; வலிந்து உதவி செய்யவும் முனைந்தார்கள். எதையும் பொருட்படுத்தாமல் என்பாட்டுக்கு நான் 'விறுவிறு'வென்று நடந்தேன். மனம் மட்டும் 'திக், திக்'கென்று அடித்துக்கொண்டேயிருந்தது. கடைசியாகத் துணிந்து என்னைத் தொடர்ந்து வந்த கறுத்த மீசைக்காரர் ஒருவர் பொறுமையிழந்து வழி மறித்தார்; நான் வெலவெலத்துப் போனேன். 'இங்கேயும் ஒரு சிவ குமாரனா!' என்று எண்ணி என் மனம் இடிந்தது. நல்ல வேளையாக அப்போது 'பாம், பாம்' என்று அலறிக் கொண்டே கார் ஒன்று என்னை நோக்கி வந்தது.

கடவுள்தான் கார் அவதாரம் எடுத்து வருகிறாரோ என்று ஒரு கணம் நினைத்தேன்; மறுகணம் அந்தப் பாவி சிவகுமாரனின் ஞாபகம் வந்து தொலைந்தது. ஒரு வேளை அவன்தான் காரில் நம்மைத் தேடிக்கொண்டு வருகிறானோ என்று பயந்தேன். எது எப்படியிருந்தாலும் இந்த மீசைக்காரனிடமிருந்து தப்பிப் பிழைத்தால் போதும் என்று எண்ணி, "ஐயா, ஐயா! கொஞ்சம் நிறுத்துங்கள், கொஞ்சம் நிறுத்துங்கள்!" என்று கத்திக் கொண்டே காருக்கெதிரே சென்று நின்றேன். என் வேண்டுகோள் நிராகரிக்கப் படவில்லை; கார் நின்றது. உள்ளே உட்கார்ந்திருந்த மனிதர் சட்டென்று கீழே இறங்கி, 'என்ன அம்மா, என்ன நடந்தது?' என்றார் பரபரப்புடன். 'ஒன்றுமில்லை; என்னைக் கொஞ்சம் ஸ்டேஷன் வரை கொண்டு போய் விட்டுவிடுகிறீர்களா?" என்றேன். 'இவ்வளவுதானே, ஏறிக்கொள்ளுங்கள்!' என்றார். அப்போதிருந்த நிலையில் நானும் தயங்காமல் ஏறிக் கொண்டேன். ஆயினும் என்றுமில்லாத அச்சம் என்னைக் கவ்விற்று; கடைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/151&oldid=1379213" இலிருந்து மீள்விக்கப்பட்டது