பக்கம்:கண் திறக்குமா.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


15. குப்பையிலே குருக்கத்தி!

"ஊரிலிருந்து இப்பொழுதுதான் வருகிறாயா? என்றாள் செங்கமலத்தின் தாயார்.

"இல்லை சித்தி, நேற்றே வந்துவிட்டேன்" என்றான் பாலு.

"அம்மாவுக்கு உடம்பு எப்படியிருக்கிறது?"

"தேவலை; அவர்களைச் சேர்ந்தவர்கள் பகவான் மேல் பாரத்தைப் போட்டுவிட்டுப் பேசாமல் இருந்துவிட்டார்கள். ஒரு பாவமும் அறியாத அவர் மீது ஒரேயடியாய்ப் பாரத்தைப் போடுவது அவ்வளவு சரியல்ல என்று நான் கொஞ்சம் சிரமம் எடுத்துக்கொண்டேன்; அதன் பயனாக அவர்களும் நோய் வாயிலிருந்து மீண்டு விட்டார்கள்."

"அப்படிச் சொல்லாதே, அப்பா! அதுவும் அவருடைய சித்தப்படித்தான் நடந்திருக்கிறது !"

"ஒருவேளை அவர்கள் செத்துப்போயிருந்தால்?"

"நீ போடா, அப்பா! உன்னுடன் நான் பேச வரவில்லை; சின்ன வயதிலேயே நீ அதிகப்பிரசங்கியாயிற்றே!"

"அறிவுக்கு வேலை கொடுப்பவன் அதிகப்பிரசங்கி! அதுதானே உங்கள் எண்ணம்? - சரி, இருக்கட்டும் - எனக்குத் தெரியாமலே ஏன் செங்கமலத்துக்குக் கல்யாணம் செய்துவிட்டீர்கள்?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/158&oldid=1379768" இலிருந்து மீள்விக்கப்பட்டது