பக்கம்:கண் திறக்குமா.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

கண் திறக்குமா?


‘'நான் கல்யாணம் செய்யும் வரை அவள் எங்கே காத்திருந்தாள்!”

‘'அப்படியானால் அவளே செய்து கொண்டு விட்டாளோ!’'

‘'அந்த அக்கிரமத்தை ஏன் கேட்கிறாய்? எல்லாவற்றையும் இவரிடம் சொல்லியிருக்கிறேன்; கேட்டுத் தெரிந்துகொள்!’' என்று என்னைச் சுட்டிக் காட்டி விட்டு, கலங்கிய கண்களைத் துடைத்துக்கொண்டே அவள் உள்ளே சென்றுவிட்டாள்.

நடந்த கதையனைத்தையும் நான் அவனிடம் சொல்லி விட்டு,' ‘எப்படி உங்கள் 'இந்து' லா;’' என்றேன்.

‘'அதனாலென்ன, சட்டம் வழங்காத நீதியை நான் வழங்கிவிடுகிறேன்!” என்றான் அவன்.

‘'அதெப்படி வழங்க முடியும்? உன் தாயார் அதற்குக் குறுக்கே நிற்க மாட்டாளா?”

“நிற்கட்டுமே, பிறரை வஞ்சிக்கும் விஷயத்தில்கூட மகன் தாயாருடன் ஒத்துழைக்க வேண்டுமா, என்ன?”

‘மாதா, பிதா, குரு, தெய்வம் என்பது நம் தருமமாயிற்றே!’'

‘'அதனாலென்ன, அவர்களைத் தெய்வமாக்குபவர்கள் ஆக்கட்டும்; நாம் மனிதர்களாக்குவோம். வாழ்க்கைக்காகத் தருமமா, தருமத்துக்காக வாழ்க்கையா? ஒன்று மாறும்போது இன்னொன்றும் மாறித்தானே தீர வேண்டும்?’

‘'அதற்கு வேண்டிய தைரியம்...”

“நிச்சயமாக இருக்கும், எனக்கு!’'

“அப்படியானால்...?"

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/159&oldid=1379218" இலிருந்து மீள்விக்கப்பட்டது