பக்கம்:கண் திறக்குமா.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

13

சரி, என்னவெல்லாமோ சொல்லி உங்களை நெடுநேரம் காக்க வைத்துவிட்டேன். இனி என் கதையைக் கேளுங்கள் - என்ன, கதையென்றா சொன்னேன்? - ஆமாம், உண்மை என்று சொன்னால்தான் நீங்கள் ‘நம்பமாட்டோம்’ என்கிறீர்களே?


1. காந்தி இட்ட தீ!

ப்பொழுதுதான் காந்தி யுகம் பூத்திருந்தது. ரெளலட் சட்டத்தை எதிர்த்துச் சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததின் மூலம் மகாத்மா காந்தி தேசமெங்கும் சுதந்திரத் தீயை மூட்டிவிட்டார். அடிமைப்பட்ட மக்களின் ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்தி மகாத்மாவின் அஹிம்சை என்ற வரம்பையும் மீறிவிட்டது. இதனால் ஆத்திரமடைந்த அதிகார வர்க்கம் மனிதத் தன்மையை இழந்து மிருகத்தனமான அடக்கு முறைகளைக் கையாண்டது. ஜாலியன் வாலா பாக், பஞ்சாப் படுகொலை முதலிய சரித்திரப் பிரசித்தி பெற்ற சம்பவங்களெல்லாம் அந்தக் காலத்தில் தான் நடந்தன.

காங்கிரஸ் மகாசபை இன்று மட்டும் கெட்டுப் போய் விடவில்லை; அன்றும் ஓரளவு கெட்டுப்போய்த்தான் இருந்தது. அதற்குக் காரணம், சமாதான முறையில் வெள்ளைக்காரரிடமிருந்து அதிகாரத்தைக் கைப்பற்றி, கெளரவம் மிக்க ராஜ்யபாரம் வகிப்பதோடு, தாங்க முடியாத பணபாரம் வகிக்கும் தங்கள் ஏகபோக உரிமையையும் பாதுகாத்துக்கொள்ளலாமென்ற உன்னத நோக்கத்துடன் சில பண மூட்டைகளும், பதவிவேட்டைக்காரர்களும் அப்பொழுதே அதில் சேர்ந்திருந்ததுதான்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/16&oldid=1379417" இலிருந்து மீள்விக்கப்பட்டது