பக்கம்:கண் திறக்குமா.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

157

"என்னுடைய சொத்தில் பாதியை இன்றே வேண்டுமானாலும் சித்திக்கு நான் எழுதி வைத்துவிடுகிறேன்!"

"உண்மையாகவா?"

"அது மட்டுமல்ல; என்னிடமிருந்து அவர்களைப் பிரிப்பதற்குக் காரணமாயிருந்த இந்தப் பூணூலையும் இன்றே நான் அறுத்தெறிந்துவிடுகிறேன்! இனி நான் பார்ப்பனனல்ல; அவர்களும் திராவிடரல்ல - எல்லோரும் மனிதர்கள்!" என்று முழங்கியவண்ணம், அந்த நிமிஷமே தன் சட்டையைத் தூக்கி அதற்குள்ளிருந்த பூணூலை அவன் அறுத்தெறிந்துவிட்டான்.

"ஆஹா! இந்த நாட்டிலுள்ள ஒவ்வொரு பார்ப்பனரும் உன்னைப் பின்பற்றினால் எவ்வளவு நன்றாயிருக்கும்? திராவிடக் கழகத்தை ஒழித்துக்கட்ட இதை விடச் சிறந்த வழி வேறு ஏதாவது இருக்க முடியுமா?" என்றேன் நான்.

அதே சமயத்தில் செங்கமலத்தின் தாயார் ஓடோடியும் வந்து ஏனோ பாலுவைக் கட்டித் தழுவிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் வடித்தாள்!

இருவரும் வெளியே வந்தோம். "செங்கமலம் என்னுடன் பிறக்கவில்லைதான்; ஆயினும் அவள் என் தங்கை!" என்றான் அவன், அழுத்தந்திருத்தமாக.

"யார் இல்லையென்றார்கள்?" என்றேன் நான்.

"அவளுக்குத் தீங்கிழைத்தவர்கள் யாராயிருந்தாலும் சரி, அவர்களை நான் சும்மா விடப்போவதில்லை!" என்று சூளுரைத்தான் அவன்.

"விடக்கூடாது, விடவே கூடாது!" என்றேன் நான்.

"இம்மாதிரி விஷயங்களில் என்னுடைய கட்சி என்ன தெரியுமா? மனிதன் உயிரைப் பணயமாக வைத்துவிட

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/160&oldid=1378877" இலிருந்து மீள்விக்கப்பட்டது