பக்கம்:கண் திறக்குமா.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

கண் திறக்குமா?

அத்துடன், அவள் விட்டுச் சென்ற குழந்தை வேறு கொஞ்ச நஞ்சமிருந்த துக்கத்தையும் நாளடைவில் மறக்கச் செய்துவிட்டது. அதற்கேற்றாற்போல் அந்தக் குழந்தையின் எதிர்கால வாழ்வுக்கு வேண்டியவற்றையெல்லாம் தன்னுடைய உயில் மூலம் உறுதி செய்து வைத்து விட்டான் பாலு.

இவர்களைப் பற்றிய கவலை ஒருவாறு தீர்ந்ததும் என்னைப் பற்றிய கவலையில் நான் ஆழ்ந்தேன் - விடுதலைக்குப் பிறகு எத்தனை நாட்களைத்தான் வீணாகக் கழித்துக் கொண்டிருப்பது? - ஏதாவது தொழில் செய்ய வேண்டுமென்று என் மனம் கிடந்து அடித்துக்கொண்டிருந்தது. அதற்காக ஒத்துழையாமை இயக்கத்துக்குப் பிறகு வக்கீல் தொழிலை மேற்கொள்ளவும் நான் விரும்பவில்லை; அதை விட்டு வேறு ஏதாவது ஓர் உத்தியோகத்தில் அமர்ந்து வாழ்க்கை நடத்தவும் என் மனம் இணங்கவில்லை. ஏற்கனவே எண்ணியதுபோல் பத்திரிகைத் தொழில்தான் என் மனத்துக்கு மிகவும் பிடித்திருந்தது. அதில் பல கஷ்டநஷ்டங்கள் உண்டு என்பதை நான் அறிந்துதான் இருந்தேன். ஆயினும் என் மனம் என்னவோ அந்தத் தொழிலைத்தான் விரும்பிற்று; அதை மேற்கொண்டால் தான் வயிற்றுக்குச் சேவை செய்து கொள்வதோடு, மக்களுக்கும் ஓரளாவது சேவை செய்ய முடியும் என்று நம்பிற்று. அதைக் கொல்ல என்னாலும் முடியவில்லை; பாரிஸ்டர் பரந்தாமனாலும் முடியவில்லை !

பத்திரிகைத் தொழிலுக்குப் பணமும் பக்க பலமும் அவசியம் என்று பலர் சொல்ல நான் கேட்டிருந்தேன். அவற்றில் ஒன்றைப் பற்றி எனக்குக் கவலையில்லை; அதுதான் பணம். அந்தக் கவலையை என்னுடைய வீட்டை விற்றோ, அல்லது அடமானம் வைத்தோ தீர்த்துக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/165&oldid=1379227" இலிருந்து மீள்விக்கப்பட்டது