பக்கம்:கண் திறக்குமா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

கண் திறக்குமா?

அந்த மகானுபாவர்கள் காந்திஜியின் எதிர்பாராத ஏகாதிபத்திய எதிர்ப்பைக் கண்டு முணுமுணுத்தனர். அதற்கேற்றாற்போல் மகாத்மாவின் மனமும் மேற்கூறிய படுகொலைகளுக்குப் பின் சிறிது கலங்கிவிட்டது. “நான் பெரும் பிழை செய்துவிட்டேன்!” என்று சொல்லி அவர் மனம் வருந்தினார். ஆனால் வீறு கொண்ட மக்களின் உள்ளம் அதைக் கேட்டு வீழ்ச்சியடையவில்லை; மகாத்மாவின் பெரும் பிழையை அவர்கள் பெரு மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்; அதன் பயனாகக் காந்தி மகான் காங்கிரஸின் தனிப்பெருந் தலைவரானார்.

அதே வருடத்தில்தான் நானும் சட்டப் பரீட்சையில் தேறிவிட்டுத் தொழில் அனுபவம் பெறுவதற்காகப் பாரிஸ்டர் பரந்தாமனிடம் அடைக்கலம் புகுந்திருந்தேன். நான் தொழில் அனுபவம் பெற்றுப் பின்னால் பெரும் பொருள் ஈட்டப்போவதை என் தாயார் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். தமிழ் நாட்டில் பெண்ணாய்ப் பிறந்த தோஷத்தின் காரணமாக, அவர்கள் பிறந்ததிலிருந்து கல்யாணமாகும்வரை தந்தையின் உதவியை எதிர்பார்க்கவேண்டிய நிலையில் இருந்தார்கள்; கல்யாணமான பின் கணவனின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருந்தார்கள்; கணவனைப் பிரிந்த பின் பிள்ளையின் உதவியை எதிர்பார்க்க வேண்டிய நிலையில் இருந்தார்கள்! - பிள்ளையைப் பிரிந்தால், ‘பாற் கடலில் பள்ளிகொண்டிருக்கும் படியளக்கும் பெருமான் இருக்கவே இருக்கிறார்!’ என்று இருப்பார்களோ என்னவோ!

நல்லவேளையாக என் தகப்பனார் பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் பெருமானை நம்பி எங்களையெல்லாம் விட்டுவிட்டுப் போகவில்லை. ‘அவனவன் வாழ்வுக்கும் தாழ்வுக்கும் அவனவனே காரணம்’ என்னும் கொள்கையைத் தம் கடைசி மூச்சு நிற்கும்வரை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/17&oldid=1379258" இலிருந்து மீள்விக்கப்பட்டது