பக்கம்:கண் திறக்குமா.pdf/175

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

172

கண் திறக்குமா?

எல்லாம் ஏதோ காரியார்த்தமாகத்தான் நடக்கிறது என்று தோன்றுகிறது எனக்கு!"

"காரியமில்லாமல் எதுதான் நடக்கும்? வெள்ளைக் காரனிடமிருந்து நம்முடைய தேசம் விடுதலையடைய வேண்டாமா? அந்தக் காரியத்துக்காகத்தான் காங்கிரஸ் நடக்கிறது!"

"விடுதலை அடையாவிட்டால் என்னவாம்?"

"அந்நியனுக்கு நாம் என்றும் அடிமையாயிருப்போம்!"

"விடுதலையடைந்துவிட்டால் நம் ஊரானுக்கே நாம் அடிமையாயிருப்போம்; அவ்வளவுதானே விஷயம்?"

"ஒரேயடியாக அப்படிச் சொல்லிவிட முடியுமா? இப்பொழுது நம்முடைய பணத்தையெல்லாம் வெள்ளைக்காரன் கொள்ளையடித்துக் கொண்டு போகிறான்; இதனால் எத்தனையோ கஷ்ட நஷ்டத்துக்கு நாம் உள்ளாகிறோம். தேசம் விடுதலையடைந்துவிட்டால்..."

"நம் ஊரானே நம்முடைய பணத்தைக் கொள்ளையடிப்பான்! ரொம்ப அழகுதான், போங்கள். விடுதலையாவது கிடுதலையாவது! ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் அரசாங்கம் அரசாங்கந்தானே? - அதற்கு ஓரளவு கட்டுப்பட்டு நாலு பேரைப்போல நாமும் நன்றாக வாழ வழி என்ன என்று பார்ப்பதை விட்டுவிட்டுத் தறுதலையாகத் திரிவதில் என்ன அர்த்தமிருக்கிறது?"

அவ்வளவுதான்: "பேஷ்! சொல்லுங்கள்; அதையே இன்னொரு முறை அடித்துச் சொல்லுங்கள்!" என்று கைகொட்டி ஆரவாரித்தார் பரந்தாமனார்.

அவருக்கு மட்டுமா? இந்த விஷயத்தில் சித்ராவுக்கும் பரம சந்தோஷம்; பொத்துக்கொண்டு வந்த சிரிப்பை அடக்க முடியாமல் 'களுக்'கென்று சிரித்துவிட்டாள்!

சாந்தினியோ என்னை அனுதாபத்துடன் பார்த்தாள். அந்த அம்மாளோ அத்துடன் விடுவதாயில்லை; "இன்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/175&oldid=1379254" இலிருந்து மீள்விக்கப்பட்டது