பக்கம்:கண் திறக்குமா.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

174

கண் திறக்குமா?

"அந்தக் கவலை இனிமேல் உங்களுக்கு வேண்டாம்; சித்ரா அவனைப் பார்த்துக் கொள்ளவேண்டிய விதத்தில் பார்த்துக்கொள்வாள்!" என்றார் பரந்தாமனார்.

"அதைத்தான் நாங்களும் சொல்கிறோம்; அவள் தான் அவனுக்குச் சொல்ல வேண்டியதைச் சொல்லி நல்ல வழிக்குத் திருப்ப வேண்டும்!"

"ஆஹா! சொல்வாள்; சொல்வதைக் கேட்காவிட்டால் கன்னத்தில் அறைந்துகூடச் சொல்வாள்!"

"அறையட்டும்; நன்றாய் அறையட்டும். எப்படி யாவது அவர்கள் இருவரும் நன்றாயிருந்தால் சரி!" என்று சொல்லிவிட்டு அவர்கள் எழுந்தார்கள்.

நானும் பாரிஸ்டர் பரந்தாமனும் வாசல் வரை சென்று அவர்களை வழி அனுப்பிவிட்டு வந்தோம்.

"சித்ராவின் விஷயம் முடிந்தது; உம்முடைய விஷயம் என்ன?" என்றார் பரந்தாமனார்.

"எந்த விஷயத்தைப் பற்றிக் கேட்கிறீர்கள்?" என்றேன் நான்.

"கல்யாண விஷயத்தைப் பற்றித்தான்!"

"முதலில் சுதந்திரம்; பிறகுதான் கல்யாணம்!" என்றேன் நான்.

"அதுவும் சரிதான்; வெள்ளைக்காரனுக்கு அடிமையாயிருந்து கொண்டு, சாந்தினிக்கும் அடிமையாயிருக்க முடியுமா?" என்றார் அவர் சிரித்துக்கொண்டே.



சித்ராவின் கல்யாணம் நடந்து முடிந்ததும் நான் பத்திரிகாசிரியனானேன். அப்படியென்றால் அதன் கடைசிப் பக்கத்தில் என்னுடைய பெயரை அச்சிட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/177&oldid=1379173" இலிருந்து மீள்விக்கப்பட்டது