பக்கம்:கண் திறக்குமா.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

கண் திறக்குமா?

 விழுந்தடித்துக் கொண்டுவந்து கேட்டேன்; 'லாரி இல்லை, நடந்துதான் வரவேண்டும்!' என்றால், 'இதோ வந்து விட்டேன்!' என்று சொல்லிக்கொண்டே எழுந்து நடையைக் கட்டினேன்.

இந்த நிலையில் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த என்னால் முடியவில்லை. அதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியையும் என்னால் சமாளிக்க முடிய வில்லை.

விளம்பர வருவாயின் மூலம் ஒருவாறு சமாளிக்கலா மென்றால் அதற்கும் என் மனச்சாட்சி விரோதமாயிருந்தது. ஒரு பக்கம், 'அந்நிய நாட்டுப் பொருட்களைப் பகிஷ்கரியுங்கள்!' என்று பிரசாரம் செய்து கொண்டு, இன்னொரு பக்கம், 'அந்நிய நாட்டுப் பொருட்களை அவசியம் வாங்குங்கள்!' என்று பிரசாரம் செய்யும் விளம்பரங்களைப் பத்திரிகைகளில் பிரசுரித்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்? அது மட்டுமல்ல; இன்னொரு சங்கடமும் அதில் இருந்தது. அதாவது, சத்தியத்தைக் கடைப்பிடிக்கும் சங்கடந்தான் அது!

உதாரணமாக, வனஸ்பதி உடம்புக்குக் கெடுதல் என்பது மகாத்மாவின் அபிப்பிராயம்; ஆனால் தயாரிப்பாளர்களோ அதற்கு விரோதமாக விளம்பரம் செய்கிறார்கள். பணத்துக்காக அதைப் பக்கம் பக்கமாக வெளியிடும் பத்திரிகை எப்படிக் காங்கிரஸ் பத்திரிகையாகும்? எப்படிக் காந்தி மகானைப் பின்பற்றும் பத்திரிகையாகும்?

எனவே, நான் கைவிடுவதற்கு முன்னால் தீனபந்து என்னைக் கைவிட்டு விட்டது. இருந்த வீட்டையும் கடன் கொடுத்தவன் வந்து ஆக்கிரமித்துக் கொண்டு விட்டான். வாடகைக்கு ஏதாவது ஓர் இடத்தைப் பிடிக்கவும் அந்தச் சமயம் எனக்கு வழியில்லை. இதனால் என்னுடைய நண்பர்களுக்கு நான் அடிக்கடி தொந்தரவு கொடுக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/179&oldid=1379176" இலிருந்து மீள்விக்கப்பட்டது