பக்கம்:கண் திறக்குமா.pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

179

"அதெல்லாம் உனக்கு எங்கே தெரியப் போகிறது? பாரிஸ்டர் பரந்தாமனும் அவனும்தான் இப்போது பரம நண்பர்களாயிற்றே?" என்றான் அவன்.

"நண்பர்களா!"

"ஆம், தங்களைக் காத்துக்கொள்வதற்காக அவர்கள் இருவரும் இப்போது தேசத்தைக் காக்கத் துணிந்து விட்டார்கள் செல்வம், தேசத்தைக் காக்கத் துணிந்து விட்டார்கள்!" என்று அவன் இரைந்தான்.

"அப்படியானால் இப்போது அவன் இங்கே வந்திருக்கிறானா, என்ன?"

"அப்படித்தான் சொல்கிறார்கள்!"

அதற்குமேல் அவனை நான் ஒன்றும் கேட்கவில்லை; "கலக்கட்டும், சமுத்திரத்தில் சாக்கடைகள் கலக்கட்டும்!" என்று சொல்லிவிட்டுத் திரும்பினேன்.

அவன் போய்விட்டான். அதற்குப் பின் நான் அவனைச் சந்திக்கவில்லை; அன்றே சென்னைக் கடற்கரையில் நான் கைது செய்யப்பட்டு விட்டதுதான் அதற்குக் காரணம்!

18. தியாக சிகரம்!

ழக்கம்போல் விசாரணை முடிந்து வேலூர் சிறை வாசலில் நான் போலீஸ் லாரியை விட்டுக் கீழே இறங்கியதும், "வாரும் ஐயா, வாரும். தீனபந்துவின் 'மூடுவிழா'வுக்குப் பிறகு உம்மை நான் பார்க்கவேயில்லையே!" என்று என்னை வரவேற்றார் பாரிஸ்டர் பரந்தாமன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/182&oldid=1379603" இலிருந்து மீள்விக்கப்பட்டது