பக்கம்:கண் திறக்குமா.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

182

கண் திறக்குமா?

"சரி, அந்தக் கரடியை நான் விடப்போவதில்லை; அப்புறம்?"

"சாட்சாத் குற்றாலலிங்கந்தான் எனக்குத் துணை!"

"கேள்விப்பட்டேன். கேள்விப்பட்டேன்!"

"ஆஹா! அவரும் நானும் சந்தித்த அந்த நாள் இருக்கிறதே - அற்புதம், அபாரம்!"

"அப்படி என்ன நடந்தது, அங்கே?"

"அதை ஏன் கேட்கிறீர், 'பி.ஏ., பி.எல்.' குவாலிபிகேஷன் இருந்தால் போதுமா? 'சிறை சென்ற தியாகி' என்ற குவாலிபிகேஷன் வேண்டாமா, ஊரை ஏமாற்ற? அதற்காகச் சென்னைக் கடற்கரைக்கு நானும் உம்மைப்போல் உப்புக் காய்ச்சச் சென்றேன். அங்கே துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது - அவ்வளவுதான்; அதைத் திரும்பிப்பார்க்காமல் எடுத்தேன் ஓட்டம், வேதாரண்யத்துக்கு! அங்கே எங்களுக்கெல்லாம் சாப்பாட்டு வசதி செய்து கொடுத்த புண்ணியாத்மா யார் என்று பார்த்தால், சாட்சாத் குற்றாலலிங்கம்!"

"ஆமாம். நான்கூடப் பத்திரிகையில் பார்த்தேன்; அதற்கென்ன?"

"அதற்கென்னவா! சாப்பாட்டு வசதி செய்து கொடுத்ததோடு அவர் நின்றிருந்தால் ஒன்றுமில்லைதான்! ஆனால் அந்த மனுஷனுக்கோ எனக்கு வேண்டியிருந்தது போல் 'சிறை சென்ற தியாகி' என்ற குவாலிபிகேஷன் வேண்டியிருந்தது. அதற்காக வேதாரண்யம் செல்லவோ அவர் விரும்பவில்லை. இத்தனைக்கும் சென்னைக் கடற்கரையில் கேட்ட துப்பாக்கி வேட்டுச் சத்தங்கூட அங்கே கேட்கவில்லைதான்! இருந்தாலும் உயிராசை விடுகிறதா? மனுஷன் தவியாய்த் தவித்தார். அதற்குமேல் வேதாராண்யத் துக்குச் செல்லாமல் அவரைத் தியாகியாக்குவது எப்படி என்று நான் தீவிரமாக யோசித்தேன்; ஒன்றும் தோன்ற

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/185&oldid=1379190" இலிருந்து மீள்விக்கப்பட்டது