பக்கம்:கண் திறக்குமா.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

184

கண் திறக்குமா?

லாம் என்ன சொல்கிறார், தெரியுமா? தம்முடைய அருமை மகன் தேசத்துக்காக அதைச் செய்தான், இதைச் செய்தான் மாகச் சொல்லிவிட்டு, கடைசியில் ஒரு பேதைப் பெண்ணின் கற்பைக் காக்கப் போய்த் தன் உயிரையே அவன் தியாகம் செய்துவிட்டான் என்கிறார்!"

"ஊரார் சிரிக்கவில்லை?"

"அவர்கள் சிரித்தார்களோ என்னவோ, ஒரே ஒருத்தி மட்டும் சிரித்ததை நான் பார்த்தேன்!"

"அந்த மட்டும் ஒரு புத்திசாலிப் பெண்ணாவது அந்த ஊரில் இருந்தாளே?"

"அவள் வேறு யாருமில்லை; தன் கற்பைக் காக்க வந்த சிவகுமாரனை அநியாயமாகக் கொன்றுவிட்டுச் சிறைக்குச் சென்று வந்தவள்தான்!"

"அப்படிச் சொல்லுங்கள்; உண்மை அவளைத் தவிர வேறு யாருக்கும் தெரியவில்லையாக்கும்?"

"அதனால்தானே அவளுக்குப் பைத்தியம் பிடித்தது"

"என்ன, அவளுக்குப் பைத்தியம் பிடித்துவிட்டதா?"

"ஆமாம், உண்மை தெரிந்தால் பைத்தியம் பிடிக்காமல் வேறு என்ன பிடிக்குமாம்?"

"ஐயோ , பாவம்!"

"பாவமாவது! சிறையிலிருந்து வெளியே வந்ததும் செய்யாமங்கலத்தில் தம்முடைய அருமைக் குமாரனுக்காக, அல்லும் பகலும் 'தேசம், தேசம்' என்று அடித்துக் கொண்டிருந்தவனுக்காக அவர் ஞாபகச் சின்னம் வேறு நிறுவப் போகிறாராம்! அவரல்லவா அரசியல் ஞானி! அவரல்லவா தியாக சிகரம்!" என்று விஷமத்தனமான புன்னகையுடன் அடுக்கிக் கொண்டே போனார் அவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/187&oldid=1379199" இலிருந்து மீள்விக்கப்பட்டது