பக்கம்:கண் திறக்குமா.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

191


வந்ததும் அவர் எப்படியோ அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி அங்கத்தினர்களில் ஒருவராகி விட்டார். அவரைப் பின் பற்றித் தஞ்சை குற்றாலலிங்கமும் தமிழ் நாட்டுத் தலைவர்களில் ஒருவராகிவிட்டார். இருவரும் சந்தர்ப்பம் வாய்க்கும் போதெல்லாம் வடநாட்டுத் தலைவர்களை வருந்தி வருந்தி அழைத்துத் தங்கள் வீட்டில் விழுந்து விழுந்து விருந்துவைத்தார்கள். தாங்கள் இல்லையென்றால் தமிழ் நாட்டுக் காங்கிரஸே அஸ்தமித்து விடும் என்ற தவறான அபிப்பிராயத்துக்கு அவர்களை உள்ளாக்கினார்கள். அதன் காரணமாகத் தேர்தலில் இருவரும் அபேட்சகர்களாக நிற்பதற்கு எந்த விதமான ஆட்சேபணையும் இல்லாமல் போயிற்று. காங்கிரஸ் சார்பில் கழுதையை நிறுத்தி வைத்தாலும் வெற்றி பெறும் என்று சொல்லிக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் எதிர்பார்த்த வெற்றியும் அவர்களுக்கு ஏமாற்றமில்லாமல் கிடைத்தது.

அதற்குப் பிறகு கேட்க வேண்டுமா? தங்களுடைய அந்தஸ்தின் காரணமாக இருவரும் மாகாண மந்திரிகளாயினர். அவர்களுடைய அந்தஸ்துக்கு முன்னால் என்னைப் போன்றவர்களின் சேவை, தியாகம், தேசபக்தியெல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைந்தன.

நானோ அந்தஸ்து என்பது அறிவையும் ஒழுக்கத்தையும், நாணயத்தையும் யோக்கியதையையுந்தான் குறிக்குமென்று அன்றுவரை எண்ணியிருந்தேன். அது பணம் ஒன்றைத்தான் குறிக்கும் என்பதை இன்றுதான் உணர்ந்தேன்.

ஆம், உலகத்தாருக்கு முன்னால் பணம் அறிவில்லாதவனை அறிவுள்ளவனாகக் காட்டுகிறது; ஒழுக்கமில்லாதவனை ஒழுக்கமுள்ளவனாகக் காட்டுகிறது; நாணயமில்லாதவனை நாணயமுள்ளவனாகக் காட்டுகிறது; யோக்கியதை இல்லாதவனை யோக்கியதையுள்ளவனாகக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/194&oldid=1378726" இலிருந்து மீள்விக்கப்பட்டது