பக்கம்:கண் திறக்குமா.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

194

கண் திறக்குமா?


"அப்படி வாரும் வழிக்கு: எனக்கு வேண்டுமானால் காரியதரிசியாக இருக்கிறீரா?”

“வேண்டாம். எனக்கும் சிரமமாயிருக்கும்; உங்களுக்கும் சிரமமாயிருக்கும்!”

“கல்யாணமான பிறகுதானே அந்தச் சிரமமெல்லாம்? அதுவரை காரியதரிசியாக இருந்தால் என்னவாம்?” “ அதற்காகச் சொல்லவில்லை; உங்களுடன் என்னால் ஒத்துழைக்க முடியாது என்பதற்காகச் சொல்கிறேன்!”

“சரி, அரசாங்கத்தில் வேறு ஏதாவது உத்தியோகம் பார்க்கிறீரா?”

“அதற்கும் நீங்கள் தானே ஏற்பாடு செய்யவேண்டி யிருக்கும்?” “ செய்கிறேன்; அதனாலென்ன?” “ பொதுவாழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் தங்களுக்குத் தெரிந்தவர்களுக்காகச் சலுகை காட்டுவது விரும்பத் தக்கதல்லவே?” “ உண்மைதான்; வெளியே தெரிவது விரும்பத் தக்கதல்லதான்!”

“அது சாத்தியமா?”

“ஏன் சாத்தியமில்லை? கீழே கதர் வேட்டி இருக்கிறது; மேலே கதர்ச் சட்டை இருக்கிறது; நாவில் காந்தி நாமம் இருக்கிறது; தலையில் காந்திக் குல்லாய் இருக்கவே இருக்கிறது - இவற்றை மீறி என்னுடைய அயோக்கியத் தனம் எப்படி வெளியே தெரிந்துவிட முடியும்?” “ வெளியே தெரியாவிட்டாலும் உங்களுடைய மனச்சாட்சிக்காவது தெரியாதா?”

“அப்படி ஒன்று என்னுள் இருப்பதையே நான் தான் எப்பொழுதோ மறந்துவிட்டேனே, ஐயா!”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/197&oldid=1379008" இலிருந்து மீள்விக்கப்பட்டது