பக்கம்:கண் திறக்குமா.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

விந்தன்

17

“அப்போது ஞாபகம் இருந்திருக்காது!” என்றேன், நான்.

“உங்களுக்கு எல்லாம் வேடிக்கையாயிருக்கிறது, என் கவலை எனக்கல்லவா தெரியும்?”

“என்ன கவலை, அம்மா? - என்னிடம் சொல்லக் கூடாதா?” என்றாள் சித்ரா, ஏதும் அறியாதவள்போல.

“இந்த வயதிலே எனக்கு வேறென்ன கவலையிருக்கும்? நாலு பேரைப்போல உங்களுக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணிவைக்க முடியவில்லையே என்ற கவலைதான்!”

“அதாவது, உங்களைப் பிடித்திருக்கும் கவலை எங்களைப் பிடிக்கவேண்டும் என்று சொல்கிறீர்கள் - அப்படித்தானே?” என்றேன், நான்.

“இல்லை, செல்வம்! காலாகாலத்தில் கல்யாணம் பண்ணிக்கொண்டு நீங்கள் இருவரும் கவலையில்லாமல் இருக்கவேண்டுமென்று சொல்கிறேன்!”

“அதற்கு நான் ஒரு யோசனை சொல்லட்டுமா, அம்மா?”

“என்ன யோசனை?”

“எங்கள் இருவருக்கும் கல்யாணம் பண்ணாமலிருங்கள்; கவலையே இருக்காது!” என்றேன், நான்.

“நல்ல யோசனைதான், போ!” என்று முகத்தைச் சுளித்த தாயார், திடீரென்று எதையோ கண்டுபிடித்து விட்டவர்களைப்போல, “உங்கள் எண்ணமும் எனக்குத் தெரியும்” என்றார்கள் புன்னகையுடன்.

“என்ன தெரியும், அம்மா?” என்று இருவரும் ஏக காலத்தில் கேட்டோம். “காலம் கெட்டுப்போச்சோ இல்லையோ, நமக்குப் பெரியோர்களாகப் பார்த்துக்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/20&oldid=1379261" இலிருந்து மீள்விக்கப்பட்டது