பக்கம்:கண் திறக்குமா.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

202

கண் திறக்குமா?


“எதற்கு?”

“உம்மைக் கைது செய்யாமலிருந்ததற்குத்தான்!”

“எப்பொழுதுமே என்னைப் போன்றவர்கள் உங்களைப் போன்றவர்களுடைய அனுதாபத்துக்கு உரியவர்களாகத் தானே இருந்திருக்கிறார்கள்” என்றேன் நான்.

“அதற்குக் காரணம் நாங்களல்ல, நீங்கள் தான்!”

“அது எப்படி?”

“அசட்டுத்தனமாக உம்மைப் போன்றவர்கள் நடந்து கொள்கிறார்கள்; அதனால் என்னைப் போன்றவர்களுடைய அனுதாபத்துக்கு உரியவர்களாகிறார்கள்!”

“அப்படி நான் என்ன அசட்டுத்தனமாக நடந்து கொண்டு விட்டேன்?”

“என்னைக் கேளாமல் நீர் சத்தியாக்கிரகத்தில் கலந்து கொண்டீரே, அந்த அசட்டுத்தனம் ஒன்றே போதாதா!”

“உங்களைக் கேட்டிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?”

“சத்தியாக்கிரகம் வெற்றியை நெருங்கிக் கொண்டிருந்த சமயத்தில் உம்மையும் மூன்றுமாத காலமாவது சிறை வாசம் செய்ய வைத்துச் சத்தியத்தின் பாதுகாவலனாக நிச்சயம் ஆக்கியிருப்பேன்!”

“இது என்ன கூத்து! சிறைக்குச் செல்வதற்குக் கூடவா இன்னொருவருடைய தயவு வேண்டும்?”

“அவசியம் வேண்டும்; அதிலும் காங்கிரஸ் மகாசபை அதிகாரத்தைக் கைப்பற்றத் துணிந்திருக்கும் இந்த நாட்களில் அதில்லாமல் முடியாது. இன்னும் சொல்லப் போனால் உமக்கு மட்டும் என்ன? மாஜி மந்திரியான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/205&oldid=1379158" இலிருந்து மீள்விக்கப்பட்டது