பக்கம்:கண் திறக்குமா.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

205

கொண்டா வந்து நிற்கப் போகின்றன" என்றான் பின்னவன்.

எல்லோரும் 'கொல்' லென்று சிரித்தனர்.

நான் வாயைத் திறக்கவில்லை . ஏனெனில், இவர்கள் அனைவரும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்தவர்கள். இத்தகையவர்களுக்குப் பத்திரிகையே உலகம்; உலகமே பத்திரிகை. தனி மனிதனுடைய யோக்கியதை, ஒழுக்கம் இவற்றைப் பற்றி இவர்களுக்கு அக்கறையே கிடையாது. பத்திரிகையில் என்ன வருகிறதோ, அதுதான் வேதவாக்கு. வேத வாக்கில் எப்படி உண்மை கிடையாதோ, அப்படியே இன்றையப் பத்திரிகை உலகிலும் உண்மை கிடையாது என்பதை இவர்களைப் போன்றவர்கள் உணர்வதேயில்லை. அப்படி உணர்ந்தால்தான் உலகமும் உருப்படும்; இவர்களும் உருப்பட்டு விடுவார்களே!

எனவே, என்னைப் போன்றவர்கள் என்னதான் உண்மை நிலையை எடுத்துச் சொன்னாலும் இவர்களுக்குப் புரியவே புரியாது. இவர்கள் கண்டதே காட்சி; கொண்டதே கோலம்; ஒரே வார்த்தையில் சொல்லப் போனால், உலகத்தில் உண்மைக்கு இடமில்லாமல் போவதற்குக் காரணமே இவர்கள்தான். கீழ்த்தர வகுப்பார் 'படிக்காமல் கெட்டவர்கள்' என்றால், இதர வகுப்பார் படித்துக் கெட்டவர்கள் - அவ்வளவுதான் இவர்களுக்கும் அவர்களுக்குமுள்ள வித்தியாசம்!

இத்தகைய மக்கள் நிறைந்த உலகத்தைத் தன்னலமற்ற சேவையினாலோ, தியாகத்தினாலோ யாரும் வெற்றி கொள்ள முடியாது; பணத்தினாலும், பொய்யினாலுமே வெற்றி கொள்ள முடியும். இந்த உண்மையை அறிந்தவர்களுக்கு வாழ்வு; அறியாதவர்களுக்குச் சாவு!

நான் சாக விரும்பவில்லை; வாழ விரும்பினேன். என்னை நாணயத்தோடு வாழ உலகம் அனுமதிக்கவில்லை; எனவே என்னையும் என்னுடைய நாணயத்தை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/208&oldid=1378693" இலிருந்து மீள்விக்கப்பட்டது