பக்கம்:கண் திறக்குமா.pdf/209

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

206

கண் திறக்குமா?

யும் விழுங்கி ஏப்பம் விடுவதற்கு நான் அதை அனுமதித்தேன்.

எந்த ஸ்தாபனத்தையும் ஆரம்பத்தில் வளர்ப்பவர்கள் என்னைப் போன்ற சாதாரண மக்கள்தான். பின்னால் அதைப் பணக்காரர்கள் விலை கொடுத்து வாங்குவது போல் வாங்கி விடுகிறார்கள். அதற்குப் பிறகு என்னைப் போன்றவர்களுக்கு அதில் எங்கே இடமிருக்கிறது?

இந்த உண்மையை அறிந்து என்னிடம் அனுதாபம் கொண்ட ஜீவன் ஏதாவது ஒன்று இந்த அழகான உலகத்தில் உண்டு என்றால் அந்த ஜீவன் சாந்தினிதான். அவளைத் தவிர வேறு யாரையும் நான் பொருட்படுத்த வில்லை. ஏனெனில், எல்லாவற்றுக்கும் ஜீவாதாரமானது பணம் என்பதை இப்போது நான் உணர்ந்துகொண்டுவிட்டேன். அந்தச் சர்வ வல்லமையுள்ள பணத்தைத் தேடுவதில் என்னுடைய கவனம் முழுவதையும் நான் செலுத்த ஆரம்பித்து விட்டேன்.

அதற்கேற்றாற்போல் அந்தக் காலத்தில் பணம் பண்ணுவது அவ்வளவு கடினமான காரியமாகவும் இல்லை. யுத்த காலத்தை முன்னிட்டுச் சர்க்கார் எடுத்ததற்கெல்லாம் ‘காண்ட்ராக்ட்’ என்றார்கள். குப்பை, கூளம் ‘காண்ட்ராக்ட்’ எடுத்தவர்களெல்லாம் குபேரர்களாகிக் கொண்டிருந்தார்கள். இத்தகைய ‘காண்ட்ராக்ட்’களின் விஷயத்தில் பாரிஸ்டர் பரந்தாமனின் கவனமும் சென்றது. ஆனால் காங்கிரஸ்காரர்கள் யுத்தத்துக்கு எந்தவிதமான உதவியும் செய்யக் கூடாதென்று காந்தி மகானின் கட்டளை எதிர்கால நன்மையை முன்னிட்டு அதை மீறப் பாரிஸ்டர் பரந்தாமன் விரும்பவில்லை; அதற்காக காங்கிரஸை விட்டுத் தலை முழுகவும் அவர் தயாராகயில்லை. எனவே, இந்த இரண்டுக்கும் மத்தியில் அவர் என்ன செய்வது என்று யோசித்தார். கடைசியில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/209&oldid=1378788" இலிருந்து மீள்விக்கப்பட்டது