பக்கம்:கண் திறக்குமா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

18

கண் திறக்குமா?

கல்யாணம் பண்ணி வைக்க வேண்டாம் என்பது உங்கள் எண்ணமாயிருக்கும்!”

“காலம் ஒருநாளும் கெட்டுப் போகாது, அம்மா! கெட்டுப் போவதாயிருந்தால் நாம்தான் கெட்டுப் போக வேண்டும்!” என்றேன், நான்.

“பின்னே யார் கல்யாணம் பண்ணி வைக்க வேண்டுமாம்?” என்றாள் சித்ரா, என்னைப் பார்த்துக் கண்களைச் சிமிட்டிக்கொண்டே.

“போடி, போ! எனக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்துக்கொண்டு நீ கற்ற வித்தைகளையெல்லாம் என்னிடம் காட்டுகிறாயா? - என்னமோ, உன்னைப்போல நான் அவ்வளவு தூரம் படித்திராவிட்டாலும், உனக்குத் தெரிந்திருப்பதில் பாதியாவது எனக்குத் தெரிந்திருக்காதா?”

“தெரிந்ததைச் சொல்லுங்களேன்!”

”அசாத்தியத் துணிச்சலும், எதையும் ஆற அமர யோசித்துப் பார்ப்பதற்கு வேண்டிய பொறுமையும் இல்லாத நாளிலே - வாழ்க்கையின் கஷ்டநஷ்டங்களைப் பற்றி அறியாத வாலிபப் பருவத்திலே - இன்பம் ஒன்றையே நாடும் இளமையிலே - ஆணுக்குப் பெண்னைக் கண்டதும், பெண்ணுக்கு ஆணைக் கண்டதும் ஈனத்தனமான ஓர் இனக்கவர்ச்சி ஏற்படுவதுண்டுதான்! அதற்குக் காரணம், அநேகமாக அவரவர்களுடைய அழகாய்த்தானிருக்கும். அந்த அழகு எப்படி நிலையற்றதோ, அதேமாதிரி அகத்தைத் தொடாத அவர்கள் அன்பும் நிலையற்றது என்பதை அறியாமல் அதைக் காதலென்றும் கீதலென்றும் சொல்லிக்கொண்டு, ‘எங்களுக்கு யாரும் கல்யாணம் பண்ணிவைக்க வேண்டாம். நாங்களே பண்ணிக்கொண்டு விடுகிறோம்!’ என்று இந்தக் காலத்து ஆண்களும் பெண்களும் சொல்கிறார்கள். அப்படிப் பண்ணிக்கொண்டு விட்டால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/21&oldid=1379262" இலிருந்து மீள்விக்கப்பட்டது