பக்கம்:கண் திறக்குமா.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34

கண் திறக்குமா?



‘அதற்காகத்தான் யார் எப்படிப் போனாலும் என் உயிரை ஏழைகளின் நன்மைக்காக அர்ப்பணம் செய்து விடுவதென்று நான் தீர்மானித்து விட்டேன்?’

‘ஏழைகளுக்கு வேண்டியது உங்கள் உயிரா, அண்ணா? அதனால் அவர்களுக்கு ஏதாவது பிரயோசனம் உண்டா? இதெல்லாம் வீண் நம்பிக்கை; வேண்டாம். கடைசி காலத்தில் அம்மாவைக் கவலைக்கு உள்ளாக்க வேண்டாம்.’

‘அம்மாவுக்குக் குறுகிய மனப்பான்மை கூடாது; பரந்த மனம் வேண்டும். என்னை மட்டும் அவர்கள் புத்திரனாகப் பாவிக்கக்கூடாது; நாற்பது கோடி மக்களையும் புத்திரர்களாகப் பாவிக்க வேண்டும்.’

‘உங்களைப்போல அம்மாவுக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கவில்லை. நீங்கள் சொல்வதுபோல அவர்கள் நாற்பது கோடி மக்களையும் தம் புத்திரர்களாகப் பாவித் தாலும் அந்த நாற்பதுகோடி மக்களும் அவர்களைத் தங்கள் அம்மாவாகப் பாவிக்கத் தயாராயிருக்க மாட்டார்கள்!’

‘நீ என்ன சொன்னாலும் நான் கேட்கப்போவதில்லை. வீணாக என்னை ஏன் தொந்தரவு செய்கிறாய்?’ என்று எரிந்து விழுந்தேன் நான்.

‘ஒரே ஒரு வரி அண்ணா, ‘என்னை மன்னித்து விடுங்கள்’ என்று சர்க்காருக்கு எழுதிக் கொடுத்துவிட்டு வந்து விடுங்கள்; அம்மாவின் கவலை தீர்ந்து போகும்.’ என்று கெஞ்சினாள். சித்ரா.

‘இந்த உடம்பில் உயிர் இருக்கும் வரை ஒருநாளும் அப்படி எழுதிக் கொடுக்க மாட்டேன்!’ என்று சொல்லிவிட்டு நான் குப்புறப் படுத்துக்கொண்டேன்.

‘செல்வம், சொல்வதைக் கேள்: பிடிவாதம் பிடிக்காதே! எனக்கு இருப்பது நீ ஒருத்தன்; உன்னையும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/37&oldid=1379175" இலிருந்து மீள்விக்கப்பட்டது