பக்கம்:கண் திறக்குமா.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38

கண் திறக்குமா?

கொரு சோடாக் குப்பியைத் திறந்து எடுத்துக் கொண்டு அவரை நோக்கிப் பாய்ந்து வருவார்கள் - வற்றிப்போன தொண்டையில் ஈரம் பாய்ச்சத்தான்!

அப்படிப்பட்டவர் காந்திஜியையும் காங்கிரஸ் மகாசபையையும் மட்டும் வெறுத்துப் பேசி வந்ததற்குக் காரணம் இல்லாமற் போகவில்லை. சமுதாயத்திலுள்ள ஊழலை ஒழிப்பதற்கு முதலில் வழி தேடாமல் நாட்டுக்கு விடுதலை கோருவது, அஸ்திவாரம் இல்லாமல் கட்டிடம் கட்டுவது போலாகும் என்பது அவருடைய அசைக்க முடியாத நம்பிக்கை. அத்தகைய விடுதலை நீண்ட நாட்கள் நீடித்து நிற்க முடியாது என்பதும் அவருடைய அபிப்பிராயமாகும்.

இவ்வளவு தூரம் தீவிரவாதியாயிருந்த பரந்தாமனார், வீட்டுக்குள்ளே பெண்ணைப் பூட்டி வைக்கும் விந்தை மனிதராயிருக்க முடியுமா? ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாக வாழக்கூடிய வகையில் தம் பெண்ணை வளர்த்து வந்தார். அதன் பயனாக சாந்தினி வைத்தியப் பரீட்சைக்குப் படித்து வந்தாள். கலாசாலைக்குப் போகும் நேரம் தவிர, பாக்கி நேரங்களில் கூட அவளைப் பார்ப்பது அரிது. ஆனால் அவளுக்கு நேர் இளையவளாகத் தோன்றும் அந்தப் பெண் மட்டும் ஏன் எப்பொழுது பார்த்தாலும் வீட்டிலேயே அடைந்து கிடக்கிறாள்? அவளுடைய முகத்தில் மட்டும் ஏன் அத்தகைய ஏக்க பாவம் எப்பொழுதும் குடிகொண்டிருக்கிறது?

இந்தக் கேள்விகள் எப்பொழுதும் என் உள்ளத்தில் எழுந்தவண்ணமாக இருந்தன. பாரிஸ்டரின் கருத்துப்படி, அந்தப்பெண் ஆண்களோடு பெண்களும் சரிநிகர் சமானமாகப் பழகக் கூடியவளாயிருந்தாலும் அதற்குக் காரணம் என்னவென்று அவளையே கேட்டுத் தெரிந்து கொண்டிருக்கலாம். அவளோ என்னைக் கண்ட மாத்திரத்தில் வெளியே நீட்டிக் கொண்டிருக்கும் தலையை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/41&oldid=1379024" இலிருந்து மீள்விக்கப்பட்டது