பக்கம்:கண் திறக்குமா.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

42

கண் திறக்குமா?

நீங்கள் சிந்தித்தாக வேண்டுமே! குடும்பத்தில் எவ்விதச் சொத்தையும், சொள்ளையும் இல்லாமல் இருந்தால்தானே அவளைப் ‘பெரிய மனிதர் வீட்டுப் பிள்ளைகள்’ கல்யாணம் செய்துகொள்ள முன் வருவார்கள்? என்னதான் இருந்தாலும் பெற்ற பெண்ணின் வாழ்க்கையைப் பாழாக்க எந்தத் தகப்பனின் மனமாவது துணியுமா? மேலும் சொந்த விஷயம், பாருங்கள்!.... அதனால்தான் உங்கள் கொள்கைக்கு விரோதமாக நீங்கள் ஓர் இளம் பெண்ணையே இரண்டாந் தாரமாகக் கொண்டீர்கள் போலிருக்கிறது! - இதெல்லாம் என்னைப் போன்றவர்களுக்குத் தெரியாதா, என்ன? - விட்டுத் தள்ளுங்கள்!” என்று ஒரு போடு போட்டு வைத்தேன்.

என்னுடைய யுக்தி பலித்தது; அவருடைய முகமும் மலர்ந்தது. “என்ன இருந்தாலும் நீ புத்திசாலி! எப்படியோ என் உள்ளத்தில் இருந்தவற்றை யெல்லாம் கண்டுபிடித்துச் சொல்லிவிட்டாயே!” என்று என் முதுகில் தட்டிக் கொடுக்க வந்தார்.

அதிலிருந்து தப்பிப் பிழைத்து நான் வீடு வந்து சேர்ந்தேன்.

ந்தச் சம்பவத்திற்குப் பிறகு சாந்தினி என்னைப் பார்க்க நேரும்போதெல்லாம் ஒரு தினுசாகப் பார்ப்பதும் உள்ளுறச் சிரித்துக்கொள்ளுவதுமாக இருந்தாள். அவளிடம் காணப்பட்ட இந்த மாறுதல் என்னை என்னவோ செய்தது. இத்தனைக்கும் அன்று நான் ஏதோ அசட்டுத்தனமாகச் சொல்லி வைத்ததும், அதற்கு அவள் ‘கலீர்’ என்று சிரித்ததும் தவிர, எங்களுக்கிடையே அதற்கு முன் எந்த விதமான பேச்சு வார்த்தையும் கிடையாது.

பின் ஏன் இப்படி?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/45&oldid=1379058" இலிருந்து மீள்விக்கப்பட்டது