பக்கம்:கண் திறக்குமா.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

43


இந்தச் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வதற்காகவோ என்னவோ, அன்று ஒரு சந்தர்ப்பம் வாய்த்தது.

சாந்தினி மட்டும் வீட்டில் இருந்த சமயம் அது. “அவர் இருக்கிறாரா?” என்று நான் கேட்டேன்.

“எவர்?” என்று திருப்பிக் கேட்டாள் அவள். நான் சளைக்கவில்லை; “அவர்தான்!” என்றேன்.

“எவர்தான்?” என்றாள் அவளும் சளைக்காமல்.

“உங்கள் அப்பா!”

அவள் குறும்புத் தனத்துடன் தன்னைச் சுற்றி ஒரு முறை பார்த்துவிட்டு, “உங்கள் என்ன உங்கள்? இங்கே நான் ஒருத்தி மட்டுந்தானே இருக்கிறேன்?” என்றாள்.

“நீங்கள் மட்டுந்தான் இருக்கிறீர்களா? - சரி. நான் போய் வருகிறேன்!” என்று திரும்பினேன்.

“என் அப்பா வரும் வரை இங்கே நீங்கள் இருந்தால் என்னவாம்?”

“ஒரு பெண் தனிமையில் இருக்கும்போது...”

“ஆண் மகன் வந்தால் அப்படியே தழுவிக் கொண்டு விடுவாளாக்கும்!”

எனக்குத் தூக்கிவாரிப்போட்டது. “இல்லை...” என்று தயங்கினேன்.

“இல்லை என்ன இல்லை? இந்தப் பெண்களைப் பற்றி ஆண்கள் ஏன்தான் இம்படிக் கற்பனை செய்து கொண்டு விடுகிறார்களோ, எனக்குத் தெரியவில்லை. அவ்வளவு பலவீனர்களா; நாங்கள்? எங்களுக்கென்று மானம் மரியாதை, உயர்ந்த எண்ணங்கள், ஒழுக்கம் ஒன்றுமே கிடையாதா? இப்படியெல்லாம் நடந்துகொள்வதன் மூலம் அவற்றையெல்லாம் நீங்கள்தான் எங்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டுமா? அதிலும் உங்களைப் போன்ற புதுயுகத்தை ஸ்தாபிக்கப் போகிறவர்கள், சமூகத்தைச் சீர்திருத்திப் புரட்டப் போகிறவர்கள், பெண்களுக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/46&oldid=1379068" இலிருந்து மீள்விக்கப்பட்டது