பக்கம்:கண் திறக்குமா.pdf/49

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

கண் திறக்குமா?


இப்படியாகப் பத்துப் பதினைந்து நாட்கள் ஓடி மறைந்தன. நானும் கோர்ட்டுக் கூண்டில் நின்று கணம் நீதிபதி அவர்கள் நான் செய்யாத குற்றத்துக்கு அளிக்கப் போகும் தண்டனையை ஏற்றுக் கொள்ளும் அளவுக்குக் குணமானேன்!

அதற்கு முதல் நாள் அவள் வழக்கம்போல் வந்தாள். அவளிடம் விடை பெற்றுக்கொள்ளும் நோக்கத்துடன், “போய் வருகிறேன்!” என்றேன் நான். “என்னை மறவாதீர்!” என்று சொல்லிவிட்டுச் சென்றாள் அவள்.

4. தண்டனை

து உலகத்தில் ‘நியாயம்’ என்று ஒன்று இருக்கிறதே, அதற்கும் பிரிட்டிஷாருக்கும் நெடு நாட்களாகவே நெருங்கிய சம்பந்தம் உண்டு. அந்த நியாயத்துக்கு உலகத்தில் எந்த மூலையிலாவது கொஞ்சம் பங்கம் நேர்ந்தாலும் சரி, பிரிட்டிஷாரை அங்கே காணலாம். அந்த விஷயத்தில் தங்களுக்குச் சம்பந்தம் இருக்கிறதோ இல்லையோ, அங்கிருக்கும் நியாயத்தைக் கோருபவர்களின் தலையில் ஓயாமல் ஒழியாமல் குண்டுகளைப் போட்டுத் தீர்த்துக் கட்டும் வரை அவர்கள் சும்மா இருக்க மாட்டார்கள்!

இப்படியாக, பிரிட்டிஷாரை நம்பி நியாயமும், நியாயத்தை நம்பி பிரிட்டிஷாரும் உயிர் வாழவேண்டிய நிலைமை உலகத்தில் எப்படியோ ஏற்பட்டுவிட்டது. இதனால் அவர்கள் அக்கிரமம் செய்தாலும், அதை நியாயத்தின் பேராலேயே நாளது வரை செய்ய வேண்டியிருக்கிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/49&oldid=1379425" இலிருந்து மீள்விக்கப்பட்டது