பக்கம்:கண் திறக்குமா.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

51


எனக்குத் தர்ம சங்கடமாகப் போய்விட்டது. ஏனெனில் அன்று வரை எனக்கென்று ஒரு அபிப்பிராயமும் இருக்கவில்லை!

இந்த நிலைமை எனக்கு மட்டும் அல்ல; இன்னும் எத்தனையோ பேருக்கு உண்டு என்பது பின்னால்தான் எனக்குத் தெரிந்தது. ஆகவே, அந்தச் சமயம் மென்று விழுங்கிக்கொண்டு, “எனக்கென்று ஒரு அபிப்பிராயமும் இல்லை, ஸார்! இப்படிக் கிளர்ச்சி செய்வதால் இந்த நாட்டுக்கு விடுதலை கிடைக்கக்கூடும் என்று தலைவர்கள் நம்புகிறார்கள். அவர்களை நம்பியும், என்னையும் அறியாமல் என் உள்ளத்தில் எழுந்த ஏதோ ஒரு விதமான உணர்ச்சியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமலுந் தான் சிறைக்கு வந்திருக்கிறேன்!” என்றேன்.

“இதனால் உங்களுக்கு ஏதாவது நன்மையுண்டா?”

“எனக்கு நன்மையுண்டோ இல்லையோ? தேசத்துக்கு நன்மையுண்டு என்று நான் நினைக்கிறேன்.”

“தேசத்துக்கு நன்மையுண்டானால் உங்களுக்கு நன்மை உண்டாகிவிடுமா?”

“எனக்கு மட்டுமென்ன, எல்லோருக்குந்தான் நன்மை யுண்டாகும்.”

அவர் ஏளனமாகச் சிரித்துக்கொண்டே, “உலகம் தெரியாத மனிதராயிருக்கிறீர்களே? தேசத்துக்கு நன்மையுண்டானால் தேசத் தலைவர்களுக்குத்தான் நன்மையுண்டாகும்; நீங்களும் நானும் எப்பொழுதும் இருப்பதுபோல் இருக்க வேண்டியதுதான்!” என்றார்.

“அப்படியிருக்கும்போது நீங்கள் ஏன் சிறைக்கு வந்திருக்கிறீர்கள்!”

“எல்லாம் காரியத்தோடுதான்! துரதிர்ஷ்டவசமாக என் அப்பா தலைவராயிருக்கவில்லை. அப்படியிருந்திருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/54&oldid=1379124" இலிருந்து மீள்விக்கப்பட்டது