பக்கம்:கண் திறக்குமா.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

கண் திறக்குமா?

நானும் பிறக்கும்போதே தலைவராகப் பிறந்திருப்பேன். இந்த நிலையில் எனக்கோ தலைவராக வேண்டுமென்று ஆசை. அதை நிறைவேற்றிக் கொள்வது எப்படி - இப்படி ஏதாவது செய்தால்தானே?”

“பைத்தியந்தான்! மக்களுக்குச் சேவை செய்யாமல் யாராவது தலைவராகிவிட முடியுமா?”

“எனக்கா பைத்தியம்? நன்றாய்ச் சொன்னீர்கள்; உங்களுக்குத்தான் பைத்தியம் பிடித்திருக்கிறது! கையில் பணமில்லாமல் என்ன சேவை வேண்டுமானாலும் செய்து பாருங்கள்; மக்கள் உங்களைக் கவனிக்கவே மாட்டார்கள். முதலில் அவர்களுக்கென்று ஏதோ சொந்த அபிப்பிராயம் உண்டென்று நீங்கள் நம்புவதே அறியாமையாகும். நான் சொல்கிறேன், அவர்களுக்குச் சொந்தமாக ஒன்றுமே கிடையாது. நாம் தான் நம்முடைய செளகரியத்திற்கேற்றபடி அவர்களை உபயோகித்துக் கொள்ள வேண்டும். எல்லாவற்றிற்கும் பணந்தான் பிரதானம். அதில்லா விட்டால் இந்தமாதிரிக் காரியங்களில் நான் பிரவேசித்திருக்கவே மாட்டேன்!”

“ஆமாம், பணத்தை வைத்துக்கொண்டு என்ன செய்வதாம்!”

“அதனால் ஆகாத காரியங்கூட ஒன்று உண்டோ! பணம் இருந்தால் ஏற்கெனவே தலைவர்களாயிருக்கும் இரண்டு பேரை ‘டீ, டின்னர்’ என்று சொல்லிச் சுலபமாகச் சிநேகம் செய்து கொண்டுவிடலாம்; அவர்களுடைய வாலைப் பிடித்துக்கொண்டு பின்னாலேயே சுற்றிக் கொண்டிருக்கலாம்; சமயம் நேரும்போதெல்லாம் அவர்களை வானளாவப் புகழ்ந்து கொண்டிருக்கலாம்; அந்தப் புகழுக்கு அடிமையாகி அவர்களும் நம்மை நாளடைவில் புகழ ஆரம்பித்து விடுவார்கள் - எல்லாம் பரஸ்பர உதவிதானே? - இந்த விஷயத்தில் இன்னொரு ரகசியமும் இருக்கிறது. ‘அவருக்குப் புகழில் விருப்பம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/55&oldid=1379133" இலிருந்து மீள்விக்கப்பட்டது