பக்கம்:கண் திறக்குமா.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

கண் திறக்குமா?

அதற்குப் பதிலாக அம்மாவும் தங்கையும், அவர்களுடன் சாந்தினியும் சேர்ந்து வந்து என் உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொண்டார்கள்.


5. பிள்ளை மனம்

திர்பார்த்து நிகழும் எந்தச் சம்பவத்தையும் கண்டு மனிதன் திடுக்கிடுவதில்லை; எதிர்பாராமல் நிகழும் சம்பவத்தைக் கண்டுதான் திடுக்கிடுகிறான். இந்த இயற்கை நியதிக்கு விரோதமாக உலகம் தோன்றிய நாளிலிருந்து ஒரு காரியம் நடந்து வருகிறது. பிறக்கும் மனிதன் எவனும் என்றைக்காவது ஒரு நாள் இறந்தே தீருவான் என்பது யாரும் எதிர்பார்க்கக் கூடியதுதானே? அப்படியிருந்தும் அது மனிதனை என்ன பாடு படுத்திவிடுகிறது?

அந்தச் சம்பவத்தை நான் இதுவரை எத்தனையோ ஆயிரமாயிரம் முறை நினைத்துக் கொண்டிருப்பேன். ஆனாலும் நினைக்கும் ஒவ்வொரு முறையும் என் மனம் அமைதியை இழந்து தவிக்க ஆரம்பித்துவிடுகிறது. நாளடைவில் கொஞ்சங் கொஞ்சமாக மறைந்துவிடும் சுபாவம் அந்தச் சம்பவத்துக்குமட்டும் ஏனோ இன்றுவரை இல்லாமலே போய்விட்டது.

பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் எத்தனையோ விஷயங்களில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் ஒரே ஒரு விஷயத்தில் மட்டும் அவர்களுக்குள் வித்தியாசம் எதுவும் இருப்பதாகத் தெரியவில்லை - மக்கட்பேறைப் பற்றியதுதான் அது. வேறு எதிலும் போட்டியிடாத அவர்கள் பிள்ளை வரம் கேட்பதில் மட்டும் போட்டியிடுகிறார்கள். பாக்கப்போனால் குழந்தையில்லையே என்று பணக்காரன் கவலை கொள்வதில் ஆச்சரியம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/57&oldid=1379427" இலிருந்து மீள்விக்கப்பட்டது