பக்கம்:கண் திறக்குமா.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

55

ஒன்றுமில்லை. உலக இன்பங்கள் அனைத்தையும் அனுபவிக்கும் அவன் குழந்தையின் மழலை இன்பத்தையும் அனுபவிக்க ஆசை கொள்கிறான், அத்துடன் தனக்குப் பின்னால் தன் சொத்து சுதந்திரங்களை அனுபவிக்க வாரிசு வேறு அவனுக்கு வேண்டியிருக்கிறது.

அந்த வாரிசு இல்லாவிட்டாலோ கேட்கவே வேண்டாம். பாவம், பகவான் பழிக்கு ஆளாகிறார்! பசியும் ருசியும் அறியாத அவருக்கு எல்லாச் சொத்துக்களும் போய்ச் சேருகின்றன. அந்தப் பரமாத்மாவைப் பாதுகாப்பதற்கென்றே பிறந்திருக்கும் ஒரு சிறு கூட்டம் - நம்மைப்போல் பசியும் ருசியும் அறிந்த கூட்டம் - மேற்படி சொத்துக்களை அனுபவிக்கிறது. அதைப் பகவானும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறார், நாமும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். கடவுளுக்குப் பிரதிநிதிகளான ராஜாக்களும், ராஜாக்களுக்குப் பிரதிநிதிகளான ராஜப் பிரதிநிதிகளும், அவர்களுக்கெல்லாம் மேலானவர்கள் என்று தங்களைப் பற்றிச் சொல்லிக்கொள்ளும் மக்களின் பிரதிநிதிகளுங்கூட அதைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்!

மக்கட்பேறு இல்லாதவர்களுக்கு இன்னொரு மகத்தான கஷ்டமும் இருக்கிறது. இம்மையோடு அவர்களுடைய இன்னல்கள் தீர்ந்து விடுவதில்லையாம்; மறுமையிலும் அந்தப் பாழும் இன்னல்கள் அவர்களைத் தொடர்ந்து வருமாம். அங்கே - அதாவது, உங்களுக்கும் எனக்கும் தெரியாத - ஏன், அந்தப் பரம பக்த சிகாமணிகளுக்கே தெரியாத, தேவலோகத்திலே ‘புத்’ என்று ஒரு நரகம் பிரத்தியேகமாக இருக்கிறதாம். புத்திர பாக்கியம் கிடைக்கப் பெறாதவர்களையெல்லாம் அந்த நரகத்துக்கு அனுப்பி வைத்துவிடுவார்களாம் - என்ன கொடூரமான தண்டனை! கேவலம், குற்றங்கள் நிறைந்த நாமாவது இங்கே கோர்ட்கீர்ட் என்று வைத்துக் கொண்டு, விசாரணை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/58&oldid=1379140" இலிருந்து மீள்விக்கப்பட்டது