பக்கம்:கண் திறக்குமா.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58

கண் திறக்குமா?

கிசாரணை என்று நடத்துகிறோமே! அங்கே அது கூடக் கிடையாதா? அப்படியிருந்தால் விசாரணை என்று ஒன்று நடக்காதா? அதன் பயனாக, ‘அவனன்றி ஓரணுவும் அசையாது’ என்னும் அழியாமொழிக்குப் பாத்திரமான ஆண்டவன் தான் அந்த அப்பாவிகள் புத்திர பாக்கியம் பெறாததற்குக் காரணம்; அவன்தான் குற்றவாளி, என்று ஏற்படாதா? தண்டனையும் அவனுக்கே கிடைக்காதா?

ஒருவேளை இங்கே நாஜிஸம், பாஸிஸம், இம்பீரியலிஸம் என்றெல்லாம் இருக்கிறதே. அப்படி அங்கேயும் ஏதாவது இருக்குமோ, என்னமோ!

எது இருந்தாலும் எது இல்லாமற் போனாலும் மேற்கூறியவற்றுக்கெல்லாம் பணக்காரர்கள் பயப்பட வேண்டியதுதான். இகலோகத்தில் சகல செளகரியங்களோடு வாழும் அவர்கள், பரலோகத்திலும் அவ்வாறு வாழ முயற்சி செய்ய வேண்டியதுதான்! - ஆனால் இந்த ஏழைகளுக்கு என்ன வந்தது? இவர்கள் வாழும் பூலோக நரகத்தைவிடவா ‘புத்’ என்னும் நரகம் மோசமாயிருக்கும்?

அட கடவுளே! அத்தகைய புத்திர பாக்கியம் பெற்றிருக்கும் ஏழைகள் வீட்டில் தான் எத்தகைய காட்சிகள்!

வயிற்றுக்கின்றி ஒட்டி உலர்ந்து போயிருக்கும் தன் தாயின் ஸ்தானத்தைப் பசியால் வாடும் குழந்தை பற்றி இழுக்கும்; தாயாருக்கோ வலி தாங்கமுடியாமற் போகும். குழந்தையோ பசிக்கு ஒரு துளிப் பாலைக்கூடக் காணாமல் முக்கி முனகும் - தாயார் பல்லைக் கடித்துக் கொண்டு பொறுத்துப் பொறுத்துப் பார்ப்பாள்; அவளுக்கு ஆத்திரம் மேலிட்டு விடும் - ‘சீ! இதென்ன பேயோ, பிசாசோ தெரியவில்லையே? என்னமாய்ப் பிடுங்கித் தொலைக் கிறது!’ என்று குழந்தையைத் தூக்கிக் கீழே தொப்பென்று போடுவாள். அது ‘அம்மம்மா,ங்கங்கா என்று தாயாரைத் தாஜா செய்யப் பார்க்கும். ‘அம்மாவுமாச்சு, ஆட்டுக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/59&oldid=1379125" இலிருந்து மீள்விக்கப்பட்டது