பக்கம்:கண் திறக்குமா.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

விந்தன்

57

குட்டியுமாச்சு’ என்று அவள் வாசலைப் பார்த்து நடையைக் கட்டிவிடுவாள்!

அப்பா வருவார்; அழுது கொண்டிருக்கும் குழந்தையைத் தூக்கிக்கொண்டு வெளியே போவார்; ஏதாவது தின்பண்டம் வாங்கிக் கொடுத்துச் சமாதானம் செய்வதற்காக மடியைத் தடவிப் பார்ப்பார் - செல்லாத காசுக்கூட இராது; தான் ஏமாற்றமடைவதோடு, குழந்தையையும் ஏமாற்றமடையச் செய்வார் - அது ‘குவா குவா, என்று கத்தும், பசியால்; அந்தச் சமயம் அதற்கு வேண்டியது பால் என்று அறிந்தோ அறியாமலோ, ‘“நாயைப் பார்த்தியா, பூனையைப் பார்த்தியா!” என்று வேடிக்கை காட்டிக்கொண்டே வீடு திரும்புவார்; அதன் கத்தல் உச்ச நிலையை அடையும் - கடைசியில் என்ன? அப்பாவும் பொறுமையிழந்து விடுவார். வீட்டுக்கு வந்ததும் வராததுமாக அதைக் கீழே உட்கார வைத்து, “கத்தாதே, கத்தாதே!” என்று கன்னத்தில் அறைவார்; அதுவோ பின்னும் ‘வீல், வீல்’ என்று கத்தித் தொலைக்கும்.

இரவு எப்படியாவது ஒரணாவுக்கு அபின் வாங்கி அந்தக் குழந்தைக்குக் கொடுத்துத் தூங்க வைத்த பிறகு தான், தம்பதிகள் இருவரும் சற்று நேரம் இந்த அழகான உலகத்தை மறந்திருக்கச் சிறிது நேரமாவது தூங்குவார்கள்.

இந்த நிலையிலும் அந்தப் பரிதாபத்துக்குரியவர்கள், ‘குழந்தை இல்லை’ என்று சந்தோஷப்படுகிறார்களா? - இல்லை; வருத்தப்படுகிறார்கள். பணக்காரர்களைப்போல் தீர்த்த யாத்திரை செய்யாவிட்டாலும், வீட்டருகே இருக்கும் வேப்பமரத்தையாவது சுற்றிச் சுற்றி வருகிறார்கள்!

தாயுள்ளமும் பிள்ளைப் பாசமும் உலகத்தில் அவ்வாறு ஒன்றோடொன்று பிணைந்து கிடக்கின்றன.

நானும் என் தாயாரும் மட்டும் அதற்கு மாறுபட்டிருக்க முடியுமா? பிரிவின் துன்பத்தைப் ‘பிள்ளை மனம்’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கண்_திறக்குமா.pdf/60&oldid=1379102" இலிருந்து மீள்விக்கப்பட்டது